இஷான் கிஷன் - யுவராஜ் சிங்
இஷான் கிஷன் - யுவராஜ் சிங்web

இஷான் கிஷனுக்கு எதிராக கருத்து.. ”SRH கோப்பை வெல்லாது..” வன்மத்தை கக்கிய யுவராஜ் சிங்!

2026 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி கோப்பை வெல்லாது என்று முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
Published on
Summary

2026 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கோப்பை வெல்லாது என யுவராஜ் சிங் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார். காயம் காரணமாக பாட் கம்மின்ஸுக்கு பதிலாக கேப்டனான இஷான் கிஷன் மீது தனிப்பட்ட விருப்பு இருந்தாலும், ஹைதராபாத்திற்காக முழுமையாக உழைக்கும் அபிஷேக் சர்மாவே கேப்டனாக நியமித்திருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தி, அணியின் பலவீனமான பந்துவீச்சை சுட்டிக்காட்டினார்.

2026 ஐபிஎல் தொடர் தொடங்கி பரபரப்பாக நடந்துவருகிறது. இத்தொடரில் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அணியின் கேப்டன் பதவி இஷான் கிஷனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் தலைமையில் முதல் போட்டியில் தோல்வியடைந்த சன்ரைசர்ஸ் அணி, கொல்கத்தாவிற்கு எதிரான இரண்டாவது போட்டியில் 226 ரன்கள் குவித்து 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

SRH vs MI
SRH vs MIcricinfo

டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசன், அனிகேத் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி என பல மேட்ச் வின்னிங் வீரர்கள் இருந்தபோதும், 2026 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணி கோப்பை வெல்லாது என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

அவருடைய இந்த கருத்து இஷான் கிஷனுக்கு பதிலாக அபிஷேக் சர்மாவை கேப்டனாக்கி இருக்கவேண்டும் என்று சொன்னதற்கு பிறகு வந்தது விமர்சனத்தை பெற்றுள்ளது.

இஷான் கிஷன் - யுவராஜ் சிங்
“எங்கிருந்தோ வந்த தோனி கேப்டன் ஆக்கப்பட்டார்..” - 18 வருட ஏமாற்றத்தை வெளிப்படுத்திய யுவராஜ்!

SRH கோப்பை வெல்லாது..

சமீபத்திய உரையாடலில் SRH கேப்டனாக அபிஷேக் சர்மாவிற்கு பதிலாக இஷான் கிஷன் கேப்டனாக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கவில்லை என்று பேசிய யுவராஜ் சிங், “நான் சற்று ஏமாற்றமடைந்தேன். எனக்கும் இஷான் கிஷனை மிகவும் பிடிக்கும். இந்திய கிரிக்கெட்டில் அவரது வளர்ச்சியையும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டில் வேறு அணியிலிருந்து வந்த ஒருவரை விடுத்து, ஹைத்ராபாத்திற்காக அனைத்தையும் கொடுக்கும் அபிஷேக் சர்மாவை கேப்டனாக்கி இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு வீரர் கற்றுக்கொள்வார். கற்றுக்கொள்வதற்கு ஐபிஎல் ஒரு சிறந்த களம் என்று நான் நினைக்கிறேன். தகவல் பரிமாற்றம் முக்கியம் என்று நான் நினைக்கிறேன், ஆனால் யார் அந்த முடிவை எடுத்தார்கள், எந்த அடிப்படையில் எடுத்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

நாளை ஹைதராபாத் வென்றால், அது நடக்கும் என்று நான் நினைக்கவில்லை, அவர்களின் பந்துவீச்சு மிகவும் பலவீனமாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். நாளை என் வார்த்தைகள் தவறாகவும் போகலாம், அந்த விமர்சனத்தை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று பேசியுள்ளார்.

இஷான் கிஷன் - யுவராஜ் சிங்
”தோனி, கபிலிடம் மன்னிப்பு கேட்கிறேன்..” தந்தையின் கருத்துக்காக வருத்தப்பட்ட யுவராஜ் சிங்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com