\
SRH defeated CSK to qualify for the playoffs
சிஎஸ்கே, இஷான் கிஷன்web

CSK தோல்வியால் பிளேஆஃப் சென்ற GT, SRH.. கடைசி இடத்திற்கு 5 அணிகள் போட்டி!

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் சிஎஸ்கே தோல்வியை தழுவியது.
Published on
Summary

சிஎஸ்கே அணியின் பிளேயிங் 11 தேர்வில் ஏற்பட்ட தவறுகள், முக்கிய வீரர்களின் ஃபார்ம் குறைவு ஆகியவை பிளேஆஃப் கனவை சிக்கலாக்கியுள்ளன. SRH-க்கு எதிரான தோல்வியால் GT, SRH ஆகியவை முன்னதாகவே பிளேஆஃப் சென்றுள்ளன. இப்போது RCB, GT, SRH இடம் பிடித்த நிலையில், மீதமுள்ள ஒரு இடத்துக்காக CSK, ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ரன்ரேட் கணக்குகளுடன் பரபரப்பான போட்டியில் உள்ளன.

நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஆஃப் செல்வதற்கான வழிகளை மற்ற அணிகள் ஏற்படுத்தி கொடுத்தாலும் சிஎஸ்கே அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. சிறந்த வீரர்களை கொண்டிருந்த போதிலும் அவர்களுக்கான பிளேயிங் 11-ஐ தேர்வுசெய்வதில் சிஎஸ்கே அணி கோட்டைவிட்டது. அவர்களின் மேட்ச் வின்னிங் வீரர்கள் தொடர்ந்து ஃபார்ம் அவுட்டிற்கு சென்றது அணியின் பின்னடைவுக்கு காரணமானது.

சிஎஸ்கே, 2026
சிஎஸ்கே, 2026csk

இப்படியான சூழலில் தான் பிளேஆஃப் செல்ல வேண்டுமானால் வெற்றிபெற்றே ஆகவேண்டிய போட்டியில் சன்ரைசர்ஸ் அணியுடன் நேற்று சென்னை அணி விளையாடியது.

SRH defeated CSK to qualify for the playoffs
Play Off Record | சிஎஸ்கேவை நெருங்கும் ஆர்சிபி.. பிளே ஆஃப் சென்ற டாப் 5 அணிகள்!

சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் எப்படியும் சிஎஸ்கே வெற்றிபெறும் என்ற எதிர்ப்பார்ப்பில் போட்டி நடைபெற்றது. முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 180 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக டெவால்ட் பிரேவிஸ் 44 ரன்களை அடித்தார்.

181 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் கடைசிவரை அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 70 ரன்கள் அடித்து SRH-ஐ வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

சிஎஸ்கே அணியின் தோல்வியால் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் மட்டுமில்லாமல் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பிளேஆஃப்க்கு சென்று அசத்தியது. ஆர்சிபி, குஜராத், ஹைத்ராபாத் முதலிய 3 அணிகள் பிளேஆஃப் சென்ற நிலையில் கடைசி 1 இடத்திற்கு சிஎஸ்கே, ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தா, பஞ்சப் கிங்ஸ் முதலிய 5 இடங்களுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

இன்னும் 2 போட்டிகளை மீதம் கொண்டிருக்கும் ராஜஸ்தான் அணி கடைசி 2 போட்டியிலும் வெற்றிபெற்றால் மற்ற 4 அணிகளுக்கான வாய்ப்பும் முறியடிக்கப்படும். அதேபோல கொல்கத்தா அணிக்கும் 2 போட்டிகள் மீதமுள்ளன, அந்தணி 11 புள்ளிகளுடன் இருக்கும் சூழலில் கடைசி 2 போட்டிகளில் மிகப்பெரிய வெற்றியை உறுதிசெய்தால் அவர்களுக்கும் பிளேஆஃப் செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மற்ற அணிகள் தங்களுடைய கடைசி போட்டியில் நல்ல ரன்ரேட்டில் வெற்றிபெற வேண்டியது அவசியமாக இருக்கிறது. 2026 ஐபிஎல் சீசன் பரபரப்பாக கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.

SRH defeated CSK to qualify for the playoffs
இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பும் ஷமி.. ODI-க்கு திரும்பும் சஞ்சு சாம்சன்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com