Will Pakistan Reach Next Round Amid Rain Disruptions?
ind, wc, pakx page

T20 WC| இந்தியாவுடன் புறக்கணிப்பு.. எதிரியாகும் மழை.. அடுத்த சுற்றுக்குச் செல்லுமா பாகி.?

இந்தியாவுடனான போட்டியை பாகிஸ்தான் புறக்கணித்திருக்கும் நிலையில், மீதி 3 போட்டிகள் உள்ளன. இதில், இரண்டு போட்டிகளில் மழை குறுக்கீடு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், பாகிஸ்தான் அடுத்த சுற்றுக்குச் செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Published on

இந்தியாவுடனான போட்டியை பாகிஸ்தான் புறக்கணித்திருக்கும் நிலையில், மீதி 3 போட்டிகள் உள்ளன. இதில், இரண்டு போட்டிகளில் மழை குறுக்கீடு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், பாகிஸ்தான் அடுத்த சுற்றுக்குச் செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலககோப்பையின் 10ஆவது சீசன் பிப்ரவரி 7 தொடங்க இருக்கிறது. மார்ச் 8 வரை நடைபெறும் இத்தொடரில், 20 அணிகளும் தலா ஐந்து அணிகள் கொண்ட நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, இந்தியாவுடன் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான், லீக் போட்டியில் விளையாடுவதைப் புறக்கணித்துள்ளது. இது உலக அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அணி, இதை உறுதிசெய்யும்பட்சத்தில் அவ்வணி மீது ஐசிசி கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் அணி லீக் பிரிவில் 4 போட்டிகளில் விளையாட உள்ளது.

Will Pakistan Reach Next Round Amid Rain Disruptions?
model imagereuters

இதில், இந்தியாவுடனான போட்டியை பாகிஸ்தான் புறக்கணித்திருக்கும் நிலையில், மீதி 3 போட்டிகள் உள்ளன. இதில், இரண்டு போட்டிகளில் மழை குறுக்கீடு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், பாகிஸ்தான் அடுத்த சுற்றுக்குச் செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொழும்பில் வானிலை வரலாற்று ரீதியாக கணிக்க முடியாததாக இருந்து வருகிறது, அந்தவகையில், இரண்டு போட்டிகளில் ஒன்று மழையால் ரத்து செய்யப்பட்டாலும், பாகிஸ்தான் புள்ளிகள் அடிப்படையில் பின்தங்கக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.

Will Pakistan Reach Next Round Amid Rain Disruptions?
T20 WC | இந்திய போட்டியை புறக்கணித்த பாகிஸ்தான்.. ICC எத்தகைய தடைகளை விதிக்கும்?

அக்யூவெதர் கருத்துப்படி, நெதர்லாந்துக்கு எதிரான பாகிஸ்தானின் முதல் ஆட்டத்தில் மழை பெய்ய கிட்டத்தட்ட 64 சதவீத வாய்ப்பு இருக்கலாம் எனவும், இதனால் இரண்டாவது இன்னிங்ஸ் கைவிடப்படாலம் எனவும் அது தெரிவித்துள்ளது. அதேபோல், நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் 25 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதாவது ஆட்டம் குறைந்தபட்ச இடையூறுகளுடன் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை, புள்ளிப் பட்டியலில் பாகிஸ்தானுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. ஒருவேளை மழையின் தாக்கத்தால் பாகிஸ்தான் அணி பாதிக்கப்பட்டால், அது, அடுத்த சுற்றுக்கு செல்லவே முடியாது எனக் கூறப்படுகிறது.

Will Pakistan Reach Next Round Amid Rain Disruptions?
pcbx page

அதேநேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இல்லாத இரண்டு போட்டிகள் முறையே பிப்ரவரி 10 மற்றும் 15 ஆகிய தேதிகளில் அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளாகும். இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இருப்பினும், ஐசிசிக்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை. ஒருவேளை, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் களமிறங்கவில்லை என்றால், ஐசிசி விதிகளின்படி போட்டி தோல்வியாகக் கருதப்படும். அது தானாகவே இரண்டு புள்ளிகளை இழப்பதற்கும், பாகிஸ்தானின் நிகர ரன் விகிதத்தில் எதிர்மறையான தாக்கத்திற்கும் வழிவகுக்கும்.

Will Pakistan Reach Next Round Amid Rain Disruptions?
T20 WC | IND போட்டியை புறக்கணிப்பு செய்த பாகி... எச்சரிக்கும் Aus பத்திரிகையாளர்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com