மீண்டும் 2019-ஆ? நியூசி.க்கு பதிலடி கொடுக்குமா ரோஹித் படை? குறுக்கே பாக், ஆப்கன் வர வாய்ப்பிருக்கா?

அரையிறுதியில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதுவது ஏறத்தாழ உறுதி ஆகிவிட்ட சூழலில் இந்திய அணி 2019 ஆம் ஆண்டு தோல்விக்கு பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணிpt web

நடப்பு உலகக் கோப்பைத் தொடரின் லீக் சுற்றுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதி போட்டிக்கு இந்தியா , ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன. இதனால் 4-வதாக செல்லப்போகும் அணி எது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

new zealand
new zealand

இந்நிலையில் நேற்று நியூசிலாந்து இலங்கை அணிகள் மோதின. அப்போது முதலில் விளையாடி ய இலங்கை அணி 171 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி 23.2 ஓவர்களில் 172 ரன்களை எடுத்து அரையிறுதி வாய்ப்பை பிரகாசமாக்கிக் கொண்டது. இருந்தபோதிலும் அது இன்னும் 100% உறுதியாகவில்லை.

காரணம், அந்த 4-வது இடத்துக்கு பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் போன்ற அணிகளும் போட்டி போட்டு வருகிறது.

அதன்படி,

- ஒருவேளை பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்து 300 ரன்களை எடுத்து, இங்கிலாந்து அணியை 13 ரன்களுக்குள் வீழ்த்த வேண்டும். அதாவது 287 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். அப்படி வீழ்த்தினால், பாகிஸ்தான் அணிக்கான அரையிறுதி வாய்ப்பு இருக்கிறது. நியூசிலாந்தின் வாய்ப்போடு ஒப்பிடுகையில், பாகிஸ்தானுக்கு இது கிட்டத்தட்ட 1% வாய்ப்புதான் உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி
"மனப்பக்குவத்தை வளர்த்துக்கோங்க" - விமர்சித்த முன்னாள் பாக். வீரருக்கு ஷமி கொடுத்த தரமான பதிலடி

- அதேபோல் ஆஃப்கானிஸ்தான் அணி அடுத்து விளையாட இருக்கும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி 438 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 450 ரன்களை விளாசினால் தென் ஆப்பிரிக்க அணியை 12 ரன்களில் வீழ்த்த வேண்டும். இதில் இன்னொரு ட்விஸ்ட் என்னவென்றால், தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசினால் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு பறிபோகும். நியூசிலாந்தோடு ஒப்பிடுகையில் இது 1% காட்டிலும் குறைவுதான்.

ஆக, நியூசிலாந்து அரையிறுதிக்கு போவது கிட்டத்தட்ட உறுதிதான்.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்ICC

அப்படி ஆகும்பட்சத்தில், 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பையின்போது ஏற்பட்ட சூழலொன்று மீண்டும் ஏற்பட்டுவிடுமோ என பேசி வருகின்றனர் ரசிகர்கள். அப்படி என்ன நடந்தது 2019-ல்? பார்ப்போம்...

2019 ஆம் ஆண்டும் இந்திய அணி லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகள் முறையே இரண்டு, மூன்றாம் இடங்களில் இருந்தன. நியூசிலாந்து அணி நான்காவது இடத்தில் இருந்தது.

முதலிடத்தில் உள்ள அணி நான்காவது இடத்தில் உள்ள அணியுடன் அரையிறுதியில் மோத வேண்டும் என்பதால் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொண்டது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 239 ரன்களை எடுக்கவே, அடுத்து விளையாடிய இந்திய அணி 221 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. 10 பந்துகளுக்கு 25 ரன்களை எடுக்க வேண்டும் என்று இருந்த நிலையில் தோனி ரன் அவுட் ஆனது ஆட்டத்தை தலைகீழாக மாற்றியது. அந்த போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

நடப்பு உலகக்கோப்பையுடன் இது தொடர்பு படுத்தப்படுவது எப்படி?

நடப்பு உலகக் கோப்பை தொடரிலும் முதலிடத்தில் உள்ள இந்திய அணி நான்காவது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியுடன் மோத வேண்டும் என்ற நிலை ஏற்பட்டக்கூடும் என்பதே விஷயம். அப்படி ஏற்பட்டால் இம்முறை இந்திய அணி விட்டதைப் பிடிக்க வாய்ப்புள்ளது என ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இன்னொருவிஷயம், இம்முறை கடந்தமுறை போல ஆக வாய்ப்பில்லை. அதாவது இந்தியா தோல்வியடைய வாய்ப்பில்லை. ஏனெனில் 2019 ஆம் ஆண்டுக்கான இந்திய அணியுடன் தற்போதைய இந்திய அணியை ஒப்பிடுகையில் பல மடங்குகள் இந்திய அணி பலமான அணியாக உள்ளது. பவர் ப்ளேக்களில் கில் - ரோஹித் கூட்டணி அதிரடியாக ஆடி ரன்களைக் குவிக்க மிடில் ஓவர்களில் விராட், ஸ்ரேயாஸ், ராகுல் போன்றோர் நிதானமான ஆட்டத்தால் இந்திய அணியை தாங்கி நிற்கின்றனர்.

சுழலிலும் ஜடேஜா, குல்தீப் அசத்த வேகப்பந்து வீச்சில் இந்திய அணி போர்ப்படையாக உள்ளது. சிராஜ், ஷமி, பும்ரா வேகங்களில் எதிரணி பேட்ஸ்மேன்கள் வந்ததும் போவதும் தெரியாமல் தங்களது விக்கெட்களை பறிகொடுக்கின்றனர். அதே சமயத்தில் இது நாக் அவுட் போட்டி என்பதும் நினைவில் இருக்க வேண்டியது அவசியம். பார்ப்போம், இம்முறை என்ன நடக்கிறதென!

உங்கள் கருத்து என்னவென, கமெண்ட்டில் சொல்லுங்க!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com