இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர்? சூசகமாக பதிலளித்த ஜெய் ஷா

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் ஒரு இந்தியராகவே இருப்பார் என சூசகமாக கூறியிருக்கிறார் ஜெய் ஷா. அப்படி என்றால் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்? இந்த விவகாரத்தில் நடப்பது என்ன என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி
jai shah
jai shahpt web

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராகவுள்ள ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம், வரும் இருபது ஓவர் உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது. இதனையடுத்து அடுத்த பயிற்சியாளரை தேர்ந்தெடுக்க, இந்திய கிரிக்கெட் வாரியம் முனைப்பு காட்டி வருகிறது...

இதன் தொடர்ச்சியாக, இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும்படி ரிக்கி பாண்டிங், ஜஸ்டின் லாங்கர், ஸ்டீபன் பிளம்பிங், கவுதம் கம்பீர் ஆகியோரை, இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியாகின..

பிசிசிஐ, ரிக்கி பாண்டிங்
பிசிசிஐ, ரிக்கி பாண்டிங்ட்விட்டர்

இதனை உறுதி செய்வது போல் ரிக்கி பாண்டிங்கும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆவதற்கான வாய்ப்பு தனக்கு வந்ததாகவும், ஆனால் தனது தற்போதைய வாழ்க்கை முறைக்கு, அது ஏற்றதாக இருக்காது என்பதால் அப்பொறுப்புக்கு விண்ணப்பிக்க போவதில்லை எனவும் தெரிவித்தார். ஜஸ்டின் லங்கரும், தான் அப்பொறுப்பை ஏற்க இது சரியான நேரம் இல்லை என்றார். ஸ்டீபன் பிளமிங்கிற்கும், தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் ஆர்வமில்லை என கூறப்படுகிறது.

jai shah
USA vs BAN T20|தொடர்ந்து 2 போட்டிகளில் வெற்றி.. அமெரிக்காவிடம் தொடரை இழந்த வங்கதேசம்!

இந்தச் சூழலில் பிசிசிஐயின் செயலாளர் ஜெய்ஷா, தலைமை பயிற்சியாளர் பதவி தொடர்பாக தாங்கள் ஆஸ்திரேலியாவை சேர்ந்த யாரையும் அணுகவில்லை என தெரிவித்திருக்கிறார். மேலும் அப்பொறுப்புக்கு வருபவர்கள், இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்புகளை முழுமையாக தெரிந்த ஒருவராக இருக்க வேண்டுமென குறிப்பிட்டிருக்கிறார்,

கவுதம் கம்பீர்
கவுதம் கம்பீர்web

இதனால் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளரும், ஒரு இந்தியராகத்தான் இருப்பார் என கருதப்படுகிறது. கவுதம் கம்பீருக்கே அப்பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது... கம்பீர் ஆலோசகராக இருந்தபோது லக்னோ அணி, தொடர்ந்து 2 முறை ஐபிஎல் பிளே- ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது.. இந்தாண்டு கொல்கத்தா அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது..

jai shah
’’நாங்க MI அல்ல.. ருதுராஜை கேப்டனாக்கியது தோனிதான்” - மும்பை அணியை விமர்சித்த CSK CEO!

டெல்லி கிழக்குத் தொகுதி பாஜக எம். பியான கவுதம் கம்பீர், இந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. பாஜக தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவிக்கும் முன், கிரிக்கெட் சார்ந்த பணிகளில் ஈடுபடுவதற்காக, தன்னை அரசியல் பணிகளிலிருந்து விடுவிக்குமாறு அவர், கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை வலியுறுத்தி இருந்தார். கம்பீருக்கே தலைமை பயிற்சியாளராகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதற்கு, இதுவும் ஒரு காரணமாக அமைந்திருக்கிறது. கம்பீரை தவிர நெஹ்ராவின் பெயரும் அப்பொறுப்புக்கு அடிபடிகிறது.

ஆஷிஷ் நெஹ்ரா-தோனி
ஆஷிஷ் நெஹ்ரா-தோனி

தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க வரும் 27 ஆம் தேதியே கடைசி நாள் என்பதால், அப்பொறுப்பை ஏற்கப்போவது யார் என்பதை தெரிந்துகொள்ள நாம் அதிக நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை...

jai shah
"India Head Coachக்கு ஆஸ்திரேலிய வீரர்களா? புரளி கூறும் ஊடகங்கள்"- விளக்கமளித்த ஜெய் ஷா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com