மேற்கிந்திய தீவுகள் அணி
மேற்கிந்திய தீவுகள் அணிpt web

தொடர் தோல்விகள்.. அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டும் மேற்கிந்திய தீவுகள்!

ஆஸ்திரேலியாவிடம் 27 ரன்களுக்கு சுருண்டு தொடரையும் 3-0 என இழந்த வெஸ்ட் இண்டீஸ், தோல்வியை மதிப்பாய்வு செய்ய லாரா, ரிச்சர்ட்ஸ், கிளைவ் லாயிட் உள்ளிட்டோருடன் அவசரக் கூட்டம் நடத்துகிறது.
Published on

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடர் முடிவடைந்திருக்கும் நிலையில், மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றிருக்கிறது. குறிப்பாக, மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் அணி 27 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்து அதிர்ச்சி அளித்தது. சர்வதேச ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது இரண்டாவது குறைவான ஸ்கோராகும். முன்னதாக,1955ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நியூஸிலாந்து அணி 26 ரன்களுக்கு சுருண்டதே ஆகக் குறைவான டீம் ஸ்கோராக நீடிக்கிறது

பேட்டிங்கில் கிட்டத்தட்ட அனைத்து மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்களுமே சொதப்பினர். மூன்று டெஸ்ட் போட்டிகளின் 6 இன்னிங்ஸையும் சேர்த்து ப்ராண்டன் கிங் மட்டும் 129 ரன்களைச் சேர்த்திருக்கிறார். இதுவே அந்த அணியின் சார்பாக அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும். இரண்டாவது இடத்தில் ரோஸ்டான் சேஸ் இருக்கிறார். இவர் 6 இன்னிங்ஸையும் சேர்த்து 114 ரன்களைச் சேர்த்திருக்கிறார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மேற்கிந்திய தீவுகள் அணியின் தோல்வி என்பது முற்றிலும் பேட்டர்களால் மட்டுமே ஏற்பட்டிருக்கிறது.

மேற்கிந்திய தீவுகள் அணி
8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரும் வீரர்.. 4ஆவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

இந்நிலையில், அணியின் தொடர் தோல்விகளுக்கான காணங்களை ஆராய அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டிருகிறது. இந்தக் கூட்டம் தொடர்பாகப் பேசிய வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத் தலைவர் கிஷோர் ஷெல்லோ. இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் ப்ரையன் லாரா, “ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சமீபத்திய டெஸ்ட் தொடரை குறிப்பாக இறுதிப்போட்டியை ஆய்வு செய்ய அவசரக் கூட்டத்தை கூட்டுமாறு அறிவுறுத்தியிருக்கிறேன். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க சர் கிளைவ் லாய்டு, சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் பிரையன் லாரா போன்றோருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறேன். இவர்கள் ஏற்கனவே குழுவில் பணியாற்றும் ஜாம்பவான்களான டாக்டர் ஷிவ்நரேன் சந்தர்பால், ஹெய்ன்ஸ், இயன் பிராட்ஷா ஆகியோருடன் இணைவார்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், இந்த ஆலோசனைக் கூட்டம் வழக்கமான நடைமுறைக் கூட்டமாக அல்லாமல், நிஜமான பரிந்துரைகளைப் பெறுவதற்காகவே நடத்தப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேற்கிந்திய தீவுகள் அணி
பத்ம பூஷண் சரோஜா தேவி மறைவு| குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com