west indies for 27 runs all out vs australia 3rd test
australiaespn

AUSvWI| 27 ரன்களில் சுருண்ட WI.. 6 விக்கெட்களைச் சாய்த்த ஸ்டார்க்.. தொடரைக் கைப்பற்றிய ஆஸி!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என ஆஸ்திரேலியா முழுமையாக கைப்பற்றியது.
Published on

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 3 டெஸ்ட், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், 2 டெஸ்ட்களில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட் ஜமைக்காவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 48 ரன்களும் கிரீன் 46 ரன்களும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அந்த அணியின் ஷமார் ஜோசப் 4 விக்கெட்டுகளையும் , ஜேடன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 143 ரன்களில் ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜான் கேம்பெல் 36 ரன் எடுத்தார்.

west indies for 27 runs all out vs australia 3rd test
மிட்செல் ஸ்டார்க்espn

ஆஸ்திரேலியா தரப்பில் போலந்து 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 82 ரன் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா, 121 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 204 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியினர், ஆஸ்திரேலிய வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். வெறும் 14.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி 27 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் அபாரமாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை அள்ளினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 176 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என ஆஸ்திரேலியா முழுமையாக கைப்பற்றியது.

west indies for 27 runs all out vs australia 3rd test
Aus Vs Wi Test: 85 ஆண்டுகளுக்குப் பிறகு அறிமுக டெஸ்டில் சாதித்த இளம் வெஸ்ட் இண்டீஸ் வீரர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com