\
வெஸ்ட் இண்டீஸ் - ஸ்காட்லாந்து
வெஸ்ட் இண்டீஸ் - ஸ்காட்லாந்துcricinfo

மகளிர் டி20 WC| கடைசி 2 ஓவர் வரை WI-க்கு பயம்காட்டிய ஸ்காட்லாந்து.. த்ரில் முடிவை எட்டிய போட்டி!

மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை கடைசிவரை பயத்தில் வைத்திருந்த ஸ்காட்லாந்து மகளிர் அணி அசத்தியது.
Published on
Summary

மகளிர் டி20 உலகக்கோப்பை குரூப் பி லீக் ஆட்டத்தில், நியூசிலாந்தை வீழ்த்திய உற்சாகத்தில் இருந்த வெஸ்ட் இண்டீஸை, ஸ்காட்லாந்து அணி கடைசி வரை பயம்காட்டியது. 154 ரன்கள் இலக்காக வைத்து விளையாடிய ஸ்காட்லாந்து, தொடக்கத்தில் அதிரடி காட்டியும், ஹேலே மேத்யூஸின் 3 விக்கெட் மாயாஜாலத்தால் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

12 அணிகள் பங்கேற்கும் 10ஆவது மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் ஜூன் 12ஆம் தேதி தொடங்கியது. இந்தியா உள்பட 12 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடர் 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குருப் ஏவில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளும், குரூப் பி-வில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.

மகளிர் டி-20 உலகக் கோப்பை
மகளிர் டி-20 உலகக் கோப்பைX

இந்நிலையில் நேற்று நடைபெற்ற பரபரப்பான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை எதிர்த்து ஸ்காட்லாந்து அணி எதிர்கொண்டது. முந்தைய போட்டியில் நடப்பு உலகக்கோப்பை சாம்பியன் நியூசிலாந்தை வெஸ்ட் இண்டீஸ் வீழ்த்திய நிலையில், இன்றைய போட்டியில் எளிதில் ஸ்காட்லாந்தை வெஸ்ட் இண்டீஸ் வீழ்த்திவிடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசிவரை விட்டுக்கொடுக்காமல் பயம்காட்டிய ஸ்காட்லாந்து அணி விண்டீஸுக்கு மறக்கமுடியாத சம்பவத்தை செய்தது.

வெஸ்ட் இண்டீஸ் - ஸ்காட்லாந்து
FIFA WC 2026 | ரொனால்டோ ஆட்டத்தால் ரசிகர்கள் ஏமாற்றம்.. மெஸ்ஸியுடன் ஒப்பிட்டு மீம்ஸ்!

பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 15 ஓவரில் 85 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலைக்கு சென்றது. ஆனால் கடைசியாக களமிறங்கி அதிரடி காட்டிய ஸ்டாஃபனி டெய்லர் 19 பந்தில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என பறக்கவிட்டு 47 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 153 ரன்கள் சேர்த்தது.

மகளிர் வெஸ்ட் இண்டீஸ் அணி
மகளிர் வெஸ்ட் இண்டீஸ் அணி

154 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய ஸ்காட்லாந்து அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கார்டர், பிரேசர் இருவரும் 5 ஓவரில் 50 ரன்கள் அடித்து அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். எல்லாமே ஸ்காட்லாந்து அணியின் பக்கம் செல்ல அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹேலே மேத்யூஸ் அடுத்தடுத்த பந்துகளில் 2 விக்கெட்டுகளை சாய்த்தது மட்டுமில்லாமல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஸ்காட்லாந்தின் பேட்டிங் வரிசையை நொறுக்கினார்.

இருப்பினும் மறுமுனையில் நிதானமாக ஆடிய தொடக்க வீராங்கனை கார்டர் 8 பவுண்டரிகள் உதவியுடன் 59 ரன்கள் அடித்து நம்பிக்கை கொடுத்தார். கார்டர், அலிசா இருவரும் 5வது விக்கெட்டுக்கு நம்பிக்கை சேர்க்க கடைசி 2 ஓவருக்கு 21 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. ஆனால் 19வது ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அணி தரமான கம்பேக் கொடுத்தது. கடைசிவரை போராடிய ஸ்காட்லாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

வெஸ்ட் இண்டீஸ் - ஸ்காட்லாந்து
ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுலதான் போட்டி.. ஒண்ணு மெஸ்ஸி.. இன்னொண்ணு எம்பாப்பே! #FIFA2026
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com