வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ்x

92 ரன்னில் சுருண்ட பாகிஸ்தான்.. 34 வருடத்திற்கு பின் வென்று வெஸ்ட் இண்டீஸ் வரலாறு!

பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வென்று அசத்தியுள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி.
Published on

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் செய்த பாகிஸ்தான் அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-2 இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தானிடம் சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்தது.

டி20 தொடரை தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற, இரண்டாவது போட்டியில் கம்பேக் கொடுத்த வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற்று 1-1 என சமன் செய்தது.

இந்நிலையில் 3வது ஒருநாள் போட்டியானது இன்று நடைபெற்றது.

வெஸ்ட் இண்டீஸ்
’சுதர்சன், கருண் நாயர் இருவருமே வேண்டாம்.. 3வது வீரராக அவர்மீது நம்பிக்கை வையுங்கள்!’ - கங்குலி

33 வருட தோல்விக்கு முற்றுப்புள்ளி..

பரபரப்பாக தொடங்கிய 3வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் சேர்த்தது. 10 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ஷாய் ஹோப் 94 பந்தில் 120 ரன்கள் அடித்து அசத்தினார்.

295 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம்கண்ட பாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் 4 பேரில் 3 பேர் பூஜ்ஜியம் ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். 23 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் தடுமாற, அடுத்த பேட்ஸ்மேன்களாலும் அணியை சரிவிலிருந்து மீட்க முடியவில்லை. 29.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் வெறும் 92 ரன்னில் சுருண்டது. அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் பவுலர் ஜேடன் சீல்ஸ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு ஒருநாள் தொடரில் 33 வருடங்களாக தோல்வியையே சந்தித்துவந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 34 வருடங்களுக்கு பிறகு சாதனை படைத்துள்ளது. கடைசியாக 1991-ல் நடந்த இருதரப்பு ஒருநாள் தொடரில் வென்றிருந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

வெஸ்ட் இண்டீஸ்
பாபர் அசாமை பின்னுக்கு தள்ளினார் ரோகித் சர்மா.. ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com