\
kl rahul
kl rahulbcci

INDvsWI| 129* ரன்கள் விளாசிய கேஎல் ராகுல்.. 351 ரன்கள் குவித்த இந்தியா!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சதமடித்தார் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கேஎல் ராகுல்.
Published on: 
Summary

INDvsWI போட்டியில் கேஎல் ராகுலின் 9வது ODI சதம் இந்திய அணிக்கு 351 ரன்கள் குவிக்க உதவியது. தொடக்கத்தில் கோலி மற்றும் கேப்டன் கில் விரைவில் அவுட்டானாலும், ரோகித் சர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் பார்ட்னர்ஷிப் மூலம் அணியை மீட்டனர். கடைசியாக வந்த கேஎல் ராகுல் சதமடித்து அணியை நல்ல டோட்டலுக்கு அழைத்துச்சென்றார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதலில் நடைபெற்றுவரும் ஒருநாள் தொடரில் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்ற இந்திய 2-0 என ஏற்கனவே தொடரை வென்றுள்ளது.

இந்தசூழலில் இரண்டு அணிகளும் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நியூ சண்டிகரில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வுசெய்து விளையாடியது.

பரப்பாக தொடங்கிய போட்டியில் ஆரம்பத்திலேயே கோலியை 0 ரன்னிலும், கேப்டன் கில்லை 1 ரன்னிலும் அவுட்டாக்கி அதிர்ச்சி கொடுத்தது வெஸ்ட் இண்டீஸ். 4 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை, 3வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு மிரட்டினர் ரோகித் சர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட்.

சதமடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் 92 ரன்கள் இருக்கும்போது கேட்ச் கொடுத்து வெளியேறினார் ரோகித் சர்மா, தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட்டும் அரைசதமடித்து அவுட்டாகினார்.

இந்தசூழலில் அடுத்து களத்திற்குவந்த கேஎல் ராகுல் ரோகித் சர்மா மற்றும் ருதுராஜ் இருவரும் தவறவிட்ட சதமடிக்கும் வாய்ப்பை தனதாக்கி தன்னுடைய 9வது ஒருநாள் சதத்தை பதிவுசெய்தார். கேஎல் ராகுலின் அதிரடியான சதத்தின் உதவியால் 50 ஓவரில் 351 ரன்கள் குவித்துள்ளது இந்தியா.

kl rahul
INDvsWI| கோலி 0, கில் 1 ரன்னில் OUT.. 92 ரன்னில் சதத்தை தவறவிட்ட ரோகித் சர்மா!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com