மைக்கேல் வாகன் - டொனால்ட் ட்ரம்ப் - வாசிம் ஜாஃபர்
மைக்கேல் வாகன் - டொனால்ட் ட்ரம்ப் - வாசிம் ஜாஃபர்web

”எங்களுக்கு இடையே ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை” இந்திய கிரிக்கெட்டரின் பதிவு இணையத்தில் வைரல்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் 2-2 என சமனானதை தொடர்ந்து, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் பதிவிட்டிருக்கும் பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது.
Published on

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்த சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-2 என சமன்செய்து அசத்தியது.

ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி
ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி

4 போட்டிகள் முடிவில் 2-1 என இங்கிலாந்து அணி முன்னிலை பெற்ற நிலையில், ஓவலில் நடைபெற்ற 5வது டெஸ்ட் போட்டியில் இரண்டு அணிகளும் வெற்றிக்காக போராடினர். 4வது நாள் ஆட்டமுடிவு வரை இங்கிலாந்திற்கே வெற்றி என்ற நிலை இருக்க, 5வது நாளில் கடைசி 40 நிமிடத்தில் தன்னுடைய அபாரமான பந்துவீச்சு மூலம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சிராஜ் இந்தியாவை த்ரில் வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

இந்த சூழலில் இங்கிலாந்து மற்றும் இந்தியாவிற்கு இடையேயான டெஸ்ட் தொடர் சமனில் முடிய, முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் மற்றும் முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாஃபர் இருவருக்கும் இடையேயான ஜாலியான கருத்துமோதல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மைக்கேல் வாகன் - டொனால்ட் ட்ரம்ப் - வாசிம் ஜாஃபர்
”5வது நாளிலும் சிராஜ் எப்படி இவ்ளோ ஆற்றலுடன் வீசினார்” - DK-விடம் வியந்து சொன்ன மெக்கல்லம்!

எங்களுக்கு இடையே ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை..

4வது நாள் ஆட்டம் முடிவுவரை இங்கிலாந்து அணி வெற்றிபெறும் சூழலில் இருக்க, அதைவைத்து வாசிம் ஜாஃபரை வம்பிழுத்த மைக்கேல் வாகன் ”மதிய வணக்கம் ஜாஃபர், நீங்க நல்லா இருப்பீங்கனு நினைக்கிறன்” என பதிவிட்டு வம்பிழுத்தார்.

5வது நாள் ஆட்டம் முடிந்து இந்தியா வெற்றிபெற்றபிறகு பதில் ட்வீட் போட்ட வாசிம் ஜாஃபர், “பாஸ் மீது படுத்துக்கொண்டு பந்து விளையாடுகிறேன், நீங்க எப்படி இருக்கீங்க மைக்கேல் வாகன்” என்று பாஸ்பால் கிரிக்கெட்டை கிண்டல் செய்து கலாய்த்திருந்தார்.

தொடர்ந்து “தொடர் சமனில் முடிந்தது ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியை பவுண்டரி கவுண்ட் அடிப்படையில் இந்தியா வென்றது” என மற்றொரு பதிவையும் பதிவிட்டிருந்தார்.

தொடர்ந்து இருவரும் மாறிமாறி பதிவிட்டுக்கொள்ள, ரசிகர்கள் அதை இவர்களுக்கு இடையேயான போரை உக்ரைன் - ரஷ்யா, இந்தியா - பாகிஸ்தான் போருடன் ஒப்பிட்டு கருத்திட்டனர்.

இந்நிலையில் மற்றொரு பதிவை பதிவிட்டிருக்கும் வாசிம் ஜாஃபர் இணையத்தை கலக்கிவருகிறார். புதிய பதிவில் “டொனால்ட் டிரம்ப், எனக்கும் மைக்கேல் வாகனுக்கும் இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்துவதாக வெளியான செய்திகள் அடிப்படையற்றவை மற்றும் உண்மைக்கு புறம்பானவை. ஆனால் சமூக வலைதளப் போர் தொடரும். இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி” என நக்கல் செய்து பதிவிட்டுள்ளார்.

மைக்கேல் வாகன் - டொனால்ட் ட்ரம்ப் - வாசிம் ஜாஃபர்
The Unsung Hero - சிராஜ்| எத்தனை தோல்விகள், எத்தனை ட்ரோல்கள்.. விழவிழ எழுந்து நின்ற வீரனின் கதை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com