‘இதனாலதான் கோலி ஸ்பெஷல்!’ - சச்சின் சாதனை முறியடிக்க கோலி எடுத்துக்கொண்ட நேரம் எவ்ளோ தெரியுமா?

சச்சின் சாதனையை சமன் செய்த பத்தே நாட்களில் அதனை முறியடித்தும் காட்டியுள்ளார் கிரிக்கெட்டின் கிங் விராட் கோலி. தகர்க்கப்படாத சச்சினின் பல சாதனைகளை கோலி முறியடிப்பாரா என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் தற்போதைய எதிர்பார்ப்பு.
சச்சின் VS விராட் கோலி.
சச்சின் VS விராட் கோலி.முகநூல்

“எனது சாதனையை அடுத்த சில நாட்களில் முறியடிப்பீர்கள் என நம்புகிறேன்....” என்ற இந்த வார்த்தையை விராட் கோலியிடம் கூறியது மாஸ்டர் பிளாஸ்டர். அவர் சொன்னதுபோலவே, அதுவும் சச்சின் முன்னிலையிலேயே அந்த வார்த்தைக்கு உயிர் கொடுத்துள்ளார் மாடர்ன் கிரிக்கெட்டின் மன்னன் விராட் கோலி.

சச்சின் VS விராட் கோலி.
சச்சின் VS விராட் கோலி.

நவம்பர் 5-ஆம் தேதி தனது 35-ஆவது பிறந்தநாளை 49-வது சதத்துடன் கொண்டாடிய விராட் கோலி, அடுத்த 10 நாட்களில் 50-வது சதமடித்து சச்சினின் உலக சாதனையை தகர்த்துள்ளார்.
அதுமட்டுமல்ல, 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் 11 போட்டிகளில் விளையாடி 673 ரன்கள் குவித்திருந்த சச்சினின் மற்றொரு சாதனைக்கும் குட்பை சொல்லி இருக்கிறார் விராட் கோலி.

சச்சின் VS விராட் கோலி.
Unstoppable... ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா! சச்சினின் 20 ஆண்டு ரெக்கர்டை முறியடித்த விராட் கோலி!
விராட் கோலி.
விராட் கோலி.

291 ஆட்டங்கள் தான்

463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 49 சதங்களை பதிவு செய்த சச்சின் தெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு தேவைப்பட்டது 291 ஆட்டங்கள்தான் என்பது கூடுதல் சிறப்பு.

200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் தெண்டுல்கர் 15,921 ரன்கள் குவித்துள்ளார். இதேபோல், 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 18,426 ரன்கள் குவித்துள்ளார். மேலும், டெஸ்டில் 51 சதங்களும் ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களும் அடித்து சதத்தில் சதம் அடித்தவர் சச்சின் தெண்டுல்கர்.

விராட் கோலி
விராட் கோலிட்விட்டர்

இதேபோல், 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,676 ரன்களும், 291 போட்டிகளில் விளையாடி 13, 794 ரன்களும், 115 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 4,008 ரன்களும் குவித்துள்ளார் விராட் கோலி. இதில், ஒருநாள் போட்டிகளில் 50 சதங்கள், டெஸ்ட் போட்டிகளில் 29 சதங்கள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் ஒரு சதம் ஆகியவை அடங்கும். 

சச்சின் VS விராட் கோலி.
SAvsAUS | இறுதிப்போட்டிக்கு முன்னேறுமாக தென்னாப்பிரிக்கா? இன்று ஆஸ்திரேலியாவுடன் மோதல்!

இவை ஒருபுறம் இருக்க சச்சின் ஓய்வு பெற்று ஆண்டுகள் பல கடந்தாலும் முறியடிக்கப்படாத அவரின் சாதனைகள் பல இருக்கின்றன. அதிக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில்
விளையாடிய வீரர், சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர், சர்வதேச போட்டிகளில் அதிக சதம் மற்றும் பவுண்டரிகள் அடித்த சாதனைக்கு சொந்தக்காரர், சர்வதேச போட்டிகளில் அதிக பவுண்டரிகள் அடித்தவர், அதிக ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் விளையாடியது என இந்த பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

சச்சின் VS விராட் கோலி.
2019 தோல்விக்கு நியூசியை பழிதீர்த்து இறுதிப்போட்டிக்கு சென்ற இந்தியா! 7 விக்கெட் வீழ்த்தி ஷமி சாதனை!

சச்சினின் சாதனைகள் முறியடிக்கப்படும் போதெல்லாம், அவர் விளையாடிய காலக்கட்டம் கடினமானது என்கிற பொதுவான கருத்து முன்வைக்கப்படும். எது எப்படி இருந்தாலும், சச்சின், கோலி ஆகிய இருபெரும் ஜாம்பவான்களின் சாதனைகள் காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது...

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com