SAvsAUS | இறுதிப்போட்டிக்கு முன்னேறுமாக தென்னாப்பிரிக்கா? இன்று ஆஸ்திரேலியாவுடன் மோதல்!

இந்த உலகக் கோப்பையின் முதல் இரு போட்டிகளிலுமே தோல்வி அடைந்தது ஆஸ்திரேலியா. ஆனாலும் மிகச் சிறப்பாக கம்பேக் கொடுத்து அடுத்த 7 போட்டிகளையும் வென்றிருக்கிறது.
SA vs AUS
SA vs AUSpt desk

அரையிறுதி 2: தென்னாப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா

மைதானம்: ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா

போட்டி தொடங்கும் நேரம்: நவம்பர் 16, மதியம் 2 மணி

2023 உலகக் கோப்பையில் இதுவரை: தென்னாப்பிரிக்கா

போட்டிகள் - 9, வெற்றிகள் - 7, தோல்விகள் - 2,

சிறந்த பேட்ஸ்மேன்: குவின்டன் டி காக் - 541 ரன்கள்

சிறந்த பௌலர்: ஜெரால்ட் கோட்ஸி - 18 விக்கெட்டுகள்

South africa
South africapt desk

நெதர்லாந்து, இந்தியா என இரண்டே போட்டிகளில் மட்டுமே தோற்ற தென்னாப்பிரிக்க அணி, தங்கள் பேட்டிங்காலேயே எதிரணிகளை சிதைத்திருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த 5 போட்டிகளிலும் அந்த அணி பெரிய ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி வென்றிருக்கிறது. ஆனால் சேஸிங்கில் சற்று தடுமாறியிருக்கிறது. சேஸ் செய்த 4 போட்டிகளில் இரண்டில் தோற்றிருக்கிறது. மற்ற 2 போட்டிகளிலும் கூட கொஞ்சம் சிரமப்பட்டுதான் வென்றிருக்கிறது.

SA vs AUS
2019 தோல்விக்கு நியூசியை பழிதீர்த்து இறுதிப்போட்டிக்கு சென்ற இந்தியா! 7 விக்கெட் வீழ்த்தி ஷமி சாதனை!

2023 உலகக் கோப்பையில் இதுவரை: ஆஸ்திரேலியா

போட்டிகள் - 9, வெற்றிகள் - 7, தோல்விகள் - 2,

சிறந்த பேட்ஸ்மேன்: டேவிட் வார்னர் - 499 ரன்கள்

சிறந்த பௌலர்: ஆடம் ஜாம்பா - 22 ரன்கள்

இந்த உலகக் கோப்பையின் முதல் இரு போட்டிகளிலுமே தோல்வி அடைந்தது ஆஸ்திரேலியா. ஆனாலும் மிகச் சிறப்பாக கம்பேக் கொடுத்து அடுத்த 7 போட்டிகளையும் வென்றிருக்கிறது அந்த அணி. புள்ளிப் பட்டியலில் முதலிரு இடங்களைப் பிடித்த இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளிடம் மட்டுமே அந்த அணி தோற்றிருக்கிறது.

Australia
Australiapt desk

மைதானம் எப்படி இருக்கும்?

ஈடன் கார்டன்ஸ் மைதானம் ஆரம்பத்தில் பேட்டிங்குக்கு ஓரளவு ஒத்துழைக்கும். ஆனால், போகப் போக பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். அதனால் அணிகள் இங்கு முதலில் பேட்டிங் செய்வதையே விரும்பும். இங்கு இந்த உலகக் கோப்பையில் இதுவரை 4 போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன. இதில் 3 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகளே வெற்றி பெற்றிருக்கின்றன. தென்னாப்பிரிக்க அணி ஏற்கெனவே இங்கு ஒரு போட்டியில் விளையாடியிருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான அந்த ஆட்டத்தில் 243 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி படுதோல்வி அடைந்தது.

மழையின் அச்சுறுத்தல்

ஆடுகளத்தின் தன்மையெல்லாம் கடந்து, இந்தப் போட்டிக்கு மழை அச்சுறுத்தல் இருக்கிறது. வியாழக்கிழமை கொல்கத்தாவில் மழை வர 50 சதவிகிதம் வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. ஒருவேளை வியாழக்கிழமை போட்டி தடைபட்டால், 2019 உலகக் கோப்பை போல ரிசர்வ் நாளில் போட்டி தொடங்கும். வெள்ளிக்கிழமை அரையிறுதி தொடங்கும். அன்றும் மழை வந்தால், முடிந்தவரை 20 ஓவர் ஆட்டமாகவாவது அதை முடிக்க முயற்சி செய்வார்கள். அப்படியும் போட்டியில் முடிவு எட்டப்படவில்லை என்றால், லீக் சுற்றில் இவ்விரு அணிகளுள் முந்தைய இடத்தில் முடித்திருந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அந்த வகையில் ரன்ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்கு முன்பாக இரண்டாவது இடத்தில் முடித்த தென்னாப்பிரிக்க அணி ஃபைனலுக்குள் நுழையும்.

SA vs AUS
கோலி to போல்ட்..”நாங்க 5 பேரு” 2008ல் ஆரம்பித்த பந்தம்! உலகக்கோப்பைகளில் அசத்தும் 5 IND-NZ வீரர்கள்!
maxwell
maxwellpt desk

ஆறாவது கோப்பையை நெருங்குமா ஆஸ்திரேலியா?

இந்தியாவுக்கு அடுத்து ஆஸ்திரேலிய அணியின் ஃபார்ம் தான் இப்போது மிரட்டலாக இருக்கிறது. அடுத்தடுத்து 7 போட்டிகளில் வென்றிருக்கும் அந்த அணியின் பேட்டிங் போட்டிக்குப் போட்டி வலுவாகியிருக்கிறது. வார்னர், மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ் மூவரும் சிக்ஸர் மழையாகப் பொழிந்து சதங்களாக அடித்துக் குவித்திருக்கிறார்கள்.

SA vs AUS
மறக்கவே முடியாத இன்னிங்ஸ்! ஒரே போட்டியில் மேக்ஸ்வெல் படைத்த 5 இமாலய சாதனைகள்!

ஸ்டீவ் ஸ்மித்தும் மெதுவாக ஃபார்முக்கு வந்துவிட்டார். டிராவிஸ் ஹெட் முதல் போட்டியில் சதமடித்திருந்தாலும் அடுத்த இரு போட்டிகளிலும் விரைவிலேயே ஆட்டமிழந்திருக்கிறார். அவர் ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆடினால் தென்னாப்பிரிக்கா இடிந்துவிடும். லாபுஷான், இங்லிஸ் இருவரும் தான் அந்த அணியில் சற்று பலவீனமான பேட்ஸ்மேன்கள். அதேசமயம் அந்த அணியின் பந்துவீச்சு பேட்டிங் அளவுக்குப் பலமாக இல்லை. வேகப்பந்துவீச்சு ஓரளவு சுமாராகவே இருக்கிறது. ஆனால் ஆடம் ஜாம்பா அட்டகாசமாகப் பந்துவீசிவருகிறார். ஈடன் போன்றதொரு ஆடுகளத்தில் அவரை சமாளிப்பது எளிதாக இருக்கப்போவதில்லை.

SA vs AUS
Adam Zampa | பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் அனைத்திலும் கலக்கிய ஆடம் ஜாம்பா..!

முதல் இறுதிப் போட்டியை உறுதி செய்யுமா தென்னாப்பிரிக்கா?

பவுமாவைத் தவிர அனைத்து பேட்ஸ்மேன்களும் முரட்டு அடி அடிக்கிறார்கள். பேட்ஸ்மேன்கள் கொடுக்கும் அடித்தளத்தைப் பயன்படுத்தி பௌலர்களும் விக்கெட் வேட்டை நடத்துகிறார்கள். சேஸிங் என்றால் தான் கொஞ்சம் தடுமாறுகிறார்கள். ஒருவேளை சேஸ் செய்ய நேர்ந்தால் அந்த அணி நம்பிக்கையுடன் அனுகவேண்டியிருக்கும். சொல்லாப்போனால் இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு அந்த நம்பிக்கை தான் மிகமுக்கிய அம்சமாக இருக்கும். ஏனெனில் இதுவரை அவர்கள் எட்ட முடியாத ஒரு தூரத்தை எட்டிப் பிடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் சிறு சிறு சொதப்பல்களால் வாய்ப்பை தவறவிட்டிருப்பவர்களுக்கு இம்முறை இறுதியை எட்ட முடியும் என்ற நம்பிக்கை தான் மிகவும் முக்கியம்.

de kock
de kockpt desk

கவனிக்கப்படவேண்டிய வீரர்கள்:

ஆஸ்திரேலியா - கிளென் மேக்ஸ்வெல்: இரட்டைச் சதம் அடித்த பிறகு இந்தப் போட்டியில் ஆடப்போகிறார் மேக்ஸ்வெல். பேட்டிங் மட்டுமல்லாது அவரது சுழற்பந்துவீச்சும் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு எதிராக முக்கியமானதாக இருக்கும்.

தென்னாப்பிரிக்கா - ரஸி வேன் டெர் டுசன்: முதலில் பேட்டிங் செய்தாலும், சேஸிங் செய்தாலும் அரையிறுதி போன்ற ஒரு போட்டியில் இவரைப் போன்ற ஆங்கர் ரோல் ஆடக்கூடியவர்களின் விக்கெட்டுகள் அதிமுக்கியம் வாய்ந்தவையாக மாறும்.

SA vs AUS
WC அரையிறுதியில் தொடர்ந்து ஒற்றை இலக்கத்தில் அவுட்... வரலாற்றை மாற்றி புதிய சாதனையில் விராட் கோலி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com