\
wi vs india
wi vs indiaicc / bcci

முதல் ODI சதமடித்த WI வீரர் ஜஸ்டின் கிரீவ்ஸ்.. இந்தியாவிற்கு 296 ரன்கள் இலக்கு!

இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதல் சர்வதேச ஒருநாள் சதமடித்தார் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜஸ்டின் கிரீவ்ஸ்.
Published on: 
Summary

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்கத்தில் காம்பெல், ஜஸ்டின் கிரீவ்ஸ் இருவரும் அரைசதம் அடித்து 135 ரன்கள் சேர்த்தனர். பின்னர் கிரீவ்ஸ் தனது முதல் ODI சதம் (101) பதிவு செய்தார். இறுதியில் அமிர் ஜாங்கோ அரைசதம் அடித்து, குல்தீப் யாதவ் 4 விக்கெட் எடுத்தாலும், வெஸ்ட் இண்டீஸ் 295 ரன்கள் குவித்தது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் 2 மணிக்கு தொடங்கியது.

இந்திய அணியின் பிளேயிங் லெவனில் முகமது சிராஜுக்கு இடம் அளிக்கப்படவில்லை. ஆனால் பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் குல்தீப் யாதவ், ஜடேஜா, நமன் திர் ஆகியோர் இடம்பிடித்தனர்.

பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய வேகப்பந்துவீச்சு யூனிட்டை சிதறடித்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய காம்பெல், க்ரீவ்ஸ் இருவரும் அரைசதமடித்து முதல் விக்கெட்டுக்கே 135 ரன்கள் சேர்த்தனர்.

இந்திய வேகப்பந்துவீச்சாளர் விக்கெட்டை வீழ்த்த போராடிய நிலையில், குல்தீப் யாதவ் மட்டுமே நம்பிக்கை அளிக்கும் பவுலராக விளங்கினார். முதல் விக்கெட்டை வீழ்த்திய குல்தீப் யாதவ், 192/2 என வலுவான நிலையில் இருந்த வெஸ்ட் இண்டீஸை அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி 198/5 என மாற்றினார்.

மறுமுனையில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஜஸ்டின் கிரீவ்ஸ் தன்னுடைய முதல் சர்வதேச ஒருநாள் சதத்தை பதிவுசெய்து அசத்தினார். 101 ரன்னில் அவர் அவுட்டாகி வெளியேற, கடைசியாக வந்து அரைசதமடித்த அமிர் ஜாங்கோ 50 ஓவரில் வெஸ்ட் இண்டீஸை 295 ரன்களுக்கு அழைத்துச்சென்றார். குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

wi vs india
இந்திய பவுலர்கள் மோசமான பந்துவீச்சு.. மைதானத்திலேயே கடுப்பான ரோகித் சர்மா.. ரசிகர்கள் வேதனை!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com