IPL | ஹர்திக் பாண்டியா OUT.. அர்ஷ்தீப் சிங் IN.. மும்பை – பஞ்சாப் மெகா டிரேடு?
2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஹர்திக் பாண்டியா டிரேடு விவகாரம் வைரலாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான், வரவிருக்கும் 2027-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியாவை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாற்றவும், அதற்குப் பதிலாக பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை மும்பை அணிக்குக் கொண்டுவரவும் இரு அணிகளுக்கிடையே ஒப்பந்தம் பேசப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிரான சூழல் நிலவியதாலும், அந்த அணி நிர்வாகம் புதிய மாற்றங்களைச் செய்ய முடிவெடுத்ததாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சிஎஸ்கே, ராஜஸ்தான், கேகேஆர், டெல்லி உள்ளிட்ட அணிகள் ஹர்திக் பாண்டியாவை வாங்க ஆர்வம் காட்டின.
குறிப்பாக, ஹர்திக் பாண்டியாவை வாங்குவதற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தீவிர போட்டியில் முன்னணியில் இருந்தபோதிலும், இறுதியாக பஞ்சாப் அணியே இந்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது. பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மற்றும் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் விஷ்ணு வினோத் ஆகிய இருவரையும் மும்பை அணி பெறும் நிலையில், அவர்களுக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா பஞ்சாப்புக்குச் செல்லவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அர்ஷ்தீப் சிங்கிற்கு 27 வயது மட்டுமே ஆகிறது. இதன்மூலமாக அடுத்த ஆண்டு அவரை தக்கவைப்பதிலும் சிரமம் இருக்காது.
மேலும், மும்பை மண்ணில் அர்ஷ்தீப் சிங்கின் ஸ்விங்கும் நன்றாக எடுபடும். அவரால் இன்னும் 6 ஆண்டுகளில் உச்சக்கட்ட ஃபார்மில் செயல்பட முடியும் என்பதால், மும்பை அணி அர்ஷ்தீப் சிங்கை டிரேட் செய்ய ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது. மறுபுறம், ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரை ஓய்வு பெற வைக்கும் திட்டத்தில் மும்பை அணி உள்ளது. அப்போது பும்ரா, திலக் வர்மா மட்டுமே ரீடெய்ன் செய்யும் வீரர்கள் பட்டியலில் இருப்பார்கள் என கணக்கு போட்டுள்ளது.

