9 ஓவரில் 53 டாட் பந்துகள் வீசி அபாரம்! ரஞ்சிக்கோப்பையில் மேஜிக் நிகழ்த்திய விதர்பா ஸ்பின்னர்!

ரஞ்சிக்கோப்பை தொடரில் விதர்பா அணியின் இடது கை சுழற்பந்துவீச்சாளர் ஆதித்யா சர்வதே 9 ஓவர்கள் வீசி அதில் 53 டாட் பந்துகளை பதிவுசெய்து மிரட்சியை ஏற்படுத்தியுள்ளார்.
ஆதித்ய சர்வதே
ஆதித்ய சர்வதேX

2023-2024 ரஞ்சிக்கோப்பை தொடரின் இரண்டாவது சுற்றுப்போட்டிகள் நடந்து வருகின்றன. உள்நாட்டின் சிறந்த கிரிக்கெட் தொடரான ரஞ்சிக்கோப்பை சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல, 38 அணிகள் போட்டியிட்டு வருகின்றன. முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாவது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் விதர்பா மற்றும் மணிப்பூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில், மணிப்பூர் அணியை தனியொரு ஆளாக கலக்கிவருகிறார் விதர்பா சுழற்பந்துவீச்சாளர் ஆதித்யா சர்வதே. முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சில் மிரட்டிய அவர், பேட்டிங்கிலும் 69 ரன்கள் அடித்து விதர்பா அணியை வெற்றியின் பக்கத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

9 ஓவரில் 53 டாட் பந்துகள்! 4 விக்கெட்டுகள்! 8 மெய்டன்கள்!

விதர்பா மற்றும் மணிப்பூர் அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் போட்டியில், டாஸ் வென்ற விதர்பா அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. முதலில் பேட்டிங் செய்த மணிப்பூர் அணி, ஆதித்யா சர்வதே மற்றும் தாக்கரே இருவரின் அபாரமான பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் 75 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல்அவுட்டானது. சிறப்பாக பந்துவீசிய தாக்கரே 5 விக்கெட்டுகளையும், ஆதித்யா சர்வதே 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.

ஆதித்ய சர்வதே
ஆதித்ய சர்வதே

பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் தன்னுடைய வாழ்நாள் சிறந்த பவுலிங்கை வீசிய 34 வயது ஆதித்யா சர்வதே, 9 ஓவரான 54 பந்துகளை வீசி அதில் 53 டாட் பந்துகளை பதிவு செய்தார். துரதிருஷ்டவசமாக ஒரு பந்து மட்டும் பிகாஷ் சிங்கின் பேட்டில் இருந்து சிக்ஸருக்குப்போனது. 9 ஓவர்களில் 8 மெய்டன் ஓவரை வீசிய அவர், 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

ஆதித்ய சர்வதே
“தோனி ஒருவர் தான் என்னை நல்ல பேட்ஸ்மேனாக மதித்தார்”! - உருக்கமாக பேசிய ஷிவம் துபே!

பேட்டிங்கில் 69 ரன்கள்! இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வென்ற விதர்பா!

தொடர்ந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸை விளையாடிய விதர்பா அணி கடகடவென 125 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 6-வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய சர்வதே பந்துவீச்சில் மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் ஒரு தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 82 பந்துகள் நிலைத்து நின்று ஆடிய சர்வதே 8 பவுண்டரிகள் 1 சிக்சர் உட்பட 69 ரன்கள் சேர்க்க, விதர்பா அணி 230 ரன்கள் சேர்த்தது.

ஆதித்ய சர்வதே
ஆதித்ய சர்வதே

155 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய மணிப்பூர் அணிக்கு மீண்டும் வில்லனாக வந்துசேர்ந்தார் ஆதித்யா சர்வதே. இந்தமுறை 11 ஓவர்களை வீசிய அவர், 6 மெய்டன் ஓவர்களுடன் 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

தொடர்ந்து போராடிய மணிப்பூர் அணி 75 ரன்னுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. ஆதித்யே சர்வதேவின் அபாரமான பேட்டிங் மற்றும் பவுலிங் திறமையால் விதர்பா அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்துள்ளது.

ஆதித்ய சர்வதே
”பவுலர்களுக்கு அதிக வலி கொடுத்தவர்” - உடைக்கவே முடியாத 6 உலக சாதனைகளை வைத்திருக்கும் ராகுல் டிராவிட்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com