\
ipl 2026 awards
ipl 2026 awardspt

ஐபிஎல் 2026| 5 விருதுகள் வென்ற சூர்யவன்ஷி.. மற்ற யாருக்கெல்லாம் என்ன விருது?

2026 ஐபிஎல் தொடர் முழுவதும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய 15 வயது வைபவ் சூர்யவன்ஷி 776 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்றார்.
Published on
Summary

2026 ஐபிஎல் தொடரை 15 வயது வைபவ் சூர்யவன்ஷி ஒருவனே தலைகீழாக மாற்றினார். 16 போட்டிகளில் 776 ரன்கள், 1 சதம், 5 அரைசதங்கள், 72 சிக்சர்கள், 200-க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட் என சாதனை படைத்து ஆரஞ்சு தொப்பி, தொடர் நாயகன், MVP, எமெர்ஜிங் பிளேயர், சூப்பர் ஸ்டிரைக்கர் உள்ளிட்ட 5 விருதுகளை குவித்தார்; ரசிகர்கள் மனதையும் கொள்ளையடித்தார்.

2026 சட்டமன்ற தேர்தல் எப்படி எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்ததோ அதேபோலவே 2026 ஐபிஎல் தொடரையும் தனியொரு ஆளாக திரும்பி பார்க்க வைத்தார் 15 வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷி. நடப்பு சீசன் முழுவதும் தன்னுடைய அதிரடி பேட்டிங்கால் எதிரணி வீரர்களையே ரசிக்கவைத்த 15 வயது சுட்டி சிறுவன், பெரும்பாலான ஐபிஎல் ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்தார். தொடக்கத்தில் வெறும் சிக்ஸ் ஹிட்டிங் திறமைகளால் எல்லோரையும் கட்டிப்போட்ட சூர்யவன்ஷி, பின்னர் தன்னுடைய சாமர்த்தியமான நிதானமான ஆட்டத்தாலும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

சூர்யவன்ஷி
சூர்யவன்ஷிweb

நடந்து முடிந்த சீசனில் 16 போட்டிகளில் 1 சதம் 5 அரைசதங்களுடன் 776 ரன்கள் குவித்த சூர்யவன்ஷி, 93, 96, 97 என 3 முறை சதமடிக்கும் வாய்ப்புகள் இருந்தும் தன்னுடைய அணிக்காக அதிரடியாக விளையாட முயன்று விக்கெட்டை பறிகொடுத்தார். ‘தன்னுடைய அணி வெற்றிபெறாமல், தான் பெறும் 100 ரன்கள் அர்த்தமற்றது’ என்ற மனநிலையில் இருக்கும் அவனுடைய ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் பலர், அவன் சதமடிக்கவில்லையே என வேதனைப்படும் அளவு அச்சிறுவனின் மீது பேரன்பை வெளிப்படுத்தினர். கோப்பை வென்ற கேப்டனான ஆர்சிபியின் ரஜத் பட்டிதார் கூட 2026 ஐபிஎல் சீசனின் சூப்பர் ஸ்டார் வைபவ் சூர்யவன்ஷி என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தசூழலில் நடப்பு சீசனில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யவன்ஷி 5 விருதுகளை வென்று சாதித்துள்ளார்.

ipl 2026 awards
கோலி வின்னிங் SIX.. 2வது கோப்பை வென்றது RCB! தோனி, ரோகித் சாதனையை உடைத்த பட்டிதார்!

5 விருதுகள் வென்ற சூர்யவன்ஷி..

1.தொடர் நாயகன் - ஆரஞ்சு தொப்பி - நடப்பு சீசனில் அதிகபட்சமாக 776 ரன்கள் எடுத்த சூர்யவன்ஷி ஆரஞ்சு தொப்பியை வென்றதோடு தொடர் நாயகன் விருதையும் வென்றார்.

2.மிகவும் மதிப்புமிக்க வீரர் (MVP) - தொடரின் மிகவும் மதிப்புமிக்க வீரர் என்ற விருதை வென்றார்.

சூர்யவன்ஷி
சூர்யவன்ஷி

3.வளர்ந்து வரும் வீரர் - எமெர்ஜிங் பிளேயர் ஆஃப் தி சீரிஸ் விருதை வென்ற இளம் வீரராக சாதனை படிஅத்தார்.

4.சூப்பர் ஸ்டிரைக்கர் - 200-க்கு மேலான ஸ்ட்ரைக் ரேட்டுடன் 700 ரன்கள் அடித்த முதல் வீரராக சாதனை படைத்தார்.

5. சூப்பர் சிக்ஸர்கள் - ஒரு சீசனில் அதிக சிக்சர்கள் அடித்த வீரராக சாதனை படைத்தார் சூர்யவன்ஷி. இதற்கு முன்னர் கிறிஸ் கெயில் அடித்த 59 சிக்சர்களே அதிகபட்சமாக இருந்த நிலையில், நடப்பு சீசனில் 72 சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினார்.

ipl 2026 awards
முதல் கோப்பை to 2வது...to 3வது? கோப்பை கலாச்சாரம் உருவானது எப்படி? RCB-ன் சக்சஸ் ஃபார்முலா!

மற்ற வீரர்கள் பெற்ற விருதுகள்?

  • அதிக பவுண்டரிகள் - சாய் சுதர்சன், 75 பவுண்டரிகள் (குஜராத் டைட்டன்ஸ்)

  • க்ரீன் டாட் பந்துகள் - முகமது சிராஜ் (குஜராத் டைட்டன்ஸ்) - 172 டாட் பந்துகள் (3268 மரங்கள்)

  • இந்த சீசனின் சிறந்த கேட்ச் - மனிஷ் பாண்டே (RCB vs KKR - டிம் டேவிட் ஆட்டமிழப்பு)

  • ஃபேர் பிளே விருது - பஞ்சாப் கிங்ஸ்

  • ஊதா தொப்பி - ககிசோ ரபாடா, 29 விக்கெட்டுகள் (குஜராத் டைட்டன்ஸ்)

rabada
rabada
  • பிட்ச் மற்றும் மைதானம் (5+ போட்டிகள்) - பெங்கால் கிரிக்கெட் சங்கம்

  • பிட்ச் மற்றும் மைதானம் (4 போட்டிகளுக்கும் குறைவானவை) - இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்கம்

  • ஆட்ட நாயகன் (இறுதிப் போட்டி) - விராட் கோலி

  • ரன்னர் அப் - குஜராத் டைட்டன்ஸ்

  • கோப்பை வென்ற சாம்பியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ipl 2026 awards
எல்லை மீறிய RCB ரசிகர்கள்.. வெற்றி கொண்டாட்டத்தில் போலீஸ் தடியடி! #Watch
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com