\
வைபவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷிcricinfo

டி20 தரவரிசை | 230 இடங்கள் முன்னேறிய வைபவ் சூர்யவன்ஷி.. அசுர வேகத்தில் 15 வயது சூப்பர்மேன்!

ஐசிசியின் டி20 தரவரிசை பட்டியலில் 230 இடங்கள் முன்னேறி ஜெட் வேகத்தில் உச்சம் தொட்டுள்ளார் இந்தியாவின் இளம்வீரர் வைபவ் சூர்யவன்ஷி.
Published on
Summary

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் தொடர்ந்து இரண்டு அரைசதங்கள் அடித்து, 15 வயதிலேயே சச்சின் டெண்டுல்கரின் இளம்வயது அரைசத சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி, உலக அளவில் இளம் வயதில் இரண்டு சர்வதேச அரைசதங்கள் அடித்த முதல் வீரராக வரலாறு படைத்துள்ளார். இதன் பலனாக ஐசிசி டி20 தரவரிசையில் 230 இடங்கள் முன்னேறி, டாப் 10 நோக்கி பாயும் புதிய நட்சத்திரமாக கவனம் ஈர்க்கிறார்.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரில் அடுத்தடுத்து 2 அரைசதங்களை பதிவுசெய்த இந்தியாவின் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி, குறைந்தவயதில் சர்வதேச அரைசதமடித்த சச்சின் டெண்டுல்கரின் உலகசாதனையை தகர்த்தெறிந்தார். சச்சின் 16 வயதில் படைத்த சாதனையை சூர்யவன்ஷி 15 வயதில் படைத்து அசத்தினார்.

அதுமட்டுமில்லாமல் இளம்வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் 2 அரைசதங்கள் அடித்த முதல் உலக வீரராகவும் மாறி சாதனை படைத்தார். இதற்கு முன்னர் நேபாள வீரர் 16 வயதில் ஒரு அரைசதமடித்ததே சாதனையாக இருந்த நிலையில் சூர்யவன்ஷி அந்த சாதனையையும் உடைத்தெரிந்தார்.

Vaibhav Sooryavanshi weakness exploited by england team
வைபவ் சூர்யவன்ஷிpt web

இந்தசூழலில் தான் அடுத்தடுத்த 2 அரைசதங்களுடன் தொடர் நாயகன் விருதையும் வென்ற சூர்யவன்ஷி, ஐசிசியின் தரவரிசை பட்டியலில் 230 இடங்கள் முன்னேறி 48வது இடம்பிடித்து அசத்தியுள்ளார். ஜிம்பாப்வே தொடருக்கு முன்னதாக 278வது இடத்தில் இருந்தார்.

அடுத்தடுத்த தொடர்களில் சூர்யவன்ஷி இதே ஆட்டத்தை வெளிப்படுத்தினால் விரைவில் டாப் 10-க்குள் இடம்பிடிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுகிறது. அதுமட்டுமில்லாமல் ஒருவேளை அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் களமிறக்கப்பட்டிருந்தால் இப்போதே டாப் 20-க்குள் இடம்பிடித்திருப்பார் என்றும் ரசிகர்கள் கருத்திட்டு வருகின்றனர்.

வைபவ் சூர்யவன்ஷி
CWG 2026 | கொட்டிய கனமழையிலும் ஓடிய கால்கள்.. வெள்ளியை வென்று ’முதல் இந்தியர்’ ஆன குல்வீர் சிங்!

ஐசிசி தரவரிசைப் பட்டியல் அப்டேட்..

டி20 பேட்டிங் தரவரிசையில் இஷான் கிஷன் தொடர்ந்து முதலிடம் பிடித்து அசத்திவருகிறார். மூன்றாவது இடத்தில் அபிஷேக் சர்மாவும், ஆறாவது இடத்தில் திலக் வர்மாவும் உள்ளனர்.

சுப்மன் கில்
சுப்மன் கில்cricinfo

ஒருநாள் தரவரிசைப்பட்டியலை பொறுத்தவரையில் இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட சுப்மன் கில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். டேரில் மிட்செல் 2வது இடமும், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா 3வது மற்றும் 4வது இடத்தில் நீடிக்கின்றனர்.

வைபவ் சூர்யவன்ஷி
CWG 2026 | பதக்க வேட்டை நடத்தும் இந்தியா.. இதுவரை எத்தனை? வென்றவர்கள் யார்?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com