இந்திய ‘ஏ’ அணியை வழிநடத்தும் முதல் கேரள வீராங்கனை: கேப்டனாக மின்னு ராணி நியமனம்!

இந்திய மகளிா் ‘ஏ’ அணியின் கேப்டனாக கேரளத்தின் மின்னு ராணி நியமிக்கப்பட்டுள்ளார்.
minnu mani
minnu maniட்விட்டர்

இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் ஏ அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், நவம்பர் 29 முதல் தொடங்க உள்ளது. இப்போட்டிகள் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கின்றன. இதற்காக, இங்கிலாந்து மகளிர் ஏ அணி, இந்தியா வர உள்ளது. இதையடுத்து, இந்தத் தொடரில் பங்கேற்க இருக்கும் இந்திய மகளிர் ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணிக்கு கேரளாவைச் சேர்ந்த மின்னு ராணி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், இந்திய ‘ஏ’ அணியை வழிநடத்தும் முதல் கேரள வீராங்கனை என்ற பெருமையை அவா் பெறுகிறாா். கடந்த ஜூலை மாதம் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரின் மூலம் மின்னு ராணி சா்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானாா். நடப்பாண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய அணியிலும் அவா் இடம்பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக 4 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் மின்னு ராணி, அவற்றில் 5 விக்கெட்டுகள் சாய்த்திருக்கிறாா்.

இந்திய ‘ஏ’ மகளிர் அணி: 

மின்னு ராணி (கேப்டன்), கனிகா அஹுஜா, உமா சேத்ரி, ஷ்ரேயங்கா பாட்டீல், திரிஷா, விருந்தா தினேஷ், திவ்யா, ஆருஷி கோயல், திஷா கசத், ராஷி கனோஜியா, மனத் காஷ்யப், அனுஷா பரெட்டி, மோனிகா படேல், காஷவீ, ஜிந்திமணி கலிதா, பிரகாஷிகா நாயக்.

முன்னதாக, கேரள பெண்கள் கிரிக்கெட் அணிக்கான விளம்பர தூதுவராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். கேரள கிரிக்கெட் சங்கம் (KCA), மகளிர் அணிக்கான விளம்பர தூதுவரை நியமிப்பது இதுவே முதல்முறை. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில், நவம்பர் 26ஆம் தேதி (நாளை) நடைபெறவுள்ள இந்தியா-ஆஸ்திரேலியா டி20 போட்டிக்கான இணையதள நுழைவுச்சீட்டு விற்பனையை கீர்த்தி சுரேஷ் தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் இந்திய அணியில் இடம்பெற்ற முதல் கேரள வீரர் என்ற பெருமைபெற்ற மின்னு மணி கலந்துகொண்டார். அவரைப் பாராட்டி பேசினார் கீர்த்தி. ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பிடித்த மின்னுவுக்கு ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. டி20 தொடருக்காக வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் மின்னு இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள கீர்த்தி சுரேஷ், கேரள பெண்கள் கிரிக்கெட் அணிக்கான விளம்பர தூதுவராக இணைந்ததற்காகப் பெருமைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: இந்தியா சாதித்த ’காபா’ மைதானம்.. இடிக்கப்போகும் ஆஸி.. வரலாறும், சர்ச்சையும்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com