கோப்பை யாருக்கு..? ஐபிஎல் இறுதிப்போட்டியில் கொல்கத்தா, ஹைதராபாத் இன்று மோதல்!

சென்னையில் இன்று நடைபெறும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா - ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐபிஎல் இறுதிப்போட்டி
ஐபிஎல் இறுதிப்போட்டிபுதிய தலைமுறை

சென்னையில் இன்று நடைபெறும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா - ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. முதல் குவாலிஃபைர் போட்டியில் ஹைதராபாத்தை வீழ்த்தி நேரடியாக கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. மற்றொரு தகுதிச் சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தானை வென்று ஹைதராபாத் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இவ்விரு அணிகளும் மோதும் இறுதிப் போட்டி, இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதனையொட்டி, கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் ஹைதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் ஆகியோர் மெரினா கடற்கரையில் ஐபிஎல் கோப்பையுடன் போட்டோசூட் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

ஐபிஎல் இறுதிப்போட்டி
IPL Final: மழையால் பயிற்சி ரத்து! Reserve Day-ம் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்? யாருக்கு கோப்பை?

அப்போது பேசிய ஸ்ரேயஸ், அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் சிறப்பாக செயல்பட்டதாகவும், அவரது முடிவுகள் அனைத்தும் சரியாக அமைந்ததாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பேட் கம்மின்ஸ், ஹைதராபாத் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்ததற்கு நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்கள் பெரும் பங்களிப்பை அளித்ததாக கூறினார். ஐசிசி தொடர்களைப் போன்று, ஐபிஎல் தொடரையும் வெல்வதில் முனைப்புடன் உள்ளதாகவும் கம்மின்ஸ் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com