\
trichy vs madurai
trichy vs maduraitnpl

TNPL 10வது சீசன் தொடக்கம்.. 2வது போட்டியில் இன்று மதுரை-திருச்சி பலப்பரீட்சை!

தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL ) டி20 தொடரின் 10வது சீசன் நேற்று பரபரப்பாக தொடங்கியது.
Published on
Summary

TNPL 10வது சீசன் ஆகஸ்ட் 4 முதல் 28 வரை திண்டுக்கல், சென்னை மைதானங்களில் 8 அணிகள் மோதும் வகையில் தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் பலப்பரீட்சை நடக்கிறது. டாஸ் வென்ற மதுரை பந்துவீச்சை தேர்வு செய்ததால், திருச்சி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 173 ரன்கள் குவித்தது.

2026 தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL ) டி20 தொடரானது ஆகஸ்டு 4ஆம் தேதி முதல் ஆகஸ்டு 28ஆம் தேதிவரை நடைபெறுகிறது. கோவை கிங்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் முதலிய 8 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தும் இத்தொடர் 28 லீக் போட்டிகளுக்கு பிறகு நாக் அவுட் போட்டிகளை எட்டவிருக்கிறது.

இத்தொடர் திண்டுக்கல் மற்றும் சென்னை சேப்பாக் ஆகிய இரண்டு மைதானங்களில் நடைபெறவிருக்கிறது. ஆகஸ்ட் 4 முதல் 15 வரை திண்டுக்கல் மைதானத்திலும், ஆகஸ்ட் 18 முதல் 28வரை லீக் போட்டிகள் மற்றும் பிளேஆஃப் போட்டிகள் சென்னை சிதம்பரம் மைதானத்திலும் நடக்கவிருக்கிறது.

நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணியை வீழ்த்தி இந்திரஜித் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றிபெற்று அசத்தியது.

இந்நிலையில் மதுரை மற்றும் திருச்சி அணிகள் மோதும் 2வது போட்டி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸை வென்ற மதுரை பந்தர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்த நிலையில், திருச்சி கிராண்ட் சோழாஸ் பேட்டிங் செய்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் கேப்டன் ஜெயராமன் அதிரடியாக விளையாடி 18 பந்தில் 43 ரன்களும், 184 ஸ்ட்ரைக்ரேட்டில் ஆல்ரவுண்டர் ராஜ்குமார் 19 பந்தில் 35 ரன்களும் அடிக்க 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை அடித்துள்ளது திருச்சி அணி.

மதுரை அணியில் சிறப்பாக பந்துவீசிய வேகப்பந்துவீச்சாளர் ராஜலிங்கம் 4 ஓவரில் வெறும் 26 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

trichy vs madurai
பதவியை இழக்கும் அகர்கர்.. Rohit-ஐ தொட்டதுதான் காரணம்? அடுத்த தேர்வுக்குழு தலைவர் VVS லக்ஸ்மன்?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com