நடராஜன் முதல் சாய் கிஷோர் வரை: சென்னையில் இன்று நடைபெறும் ’TNPL 2024’ ஏலம்!

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 சீஸனுக்கான ஏலம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
tnpl
tnplpt web

கடந்த ஆண்டில் முதன்முறையாக தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் ஏல முறையில் வீரர்கள் தேர்வு நடைபெற்ற சூழலில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள 8வது சீஸனுக்கான வீரர்கள் தேர்வும் ஏல முறையில் நடைபெற உள்ளது. டி.என்.பி. எல் ஏலத்தில் நிர்ணயிக்கப்பட்ட ஏலத்தொகையான 70 லட்சம் ரூபாய்க்குள் 8 அணிகளும் குறைந்தபட்சம் 16 வீரர்களையும் அதிகபட்சமாக 20 வீரர்களையும் தங்கள் அணியில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் இடம் பெற்றுள்ள 8 அணிகளும் முந்தைய சீஸனில் தங்கள் அணியில் இடம் பெற்றிருந்த முக்கிய வீரர்களை அணியில் தக்கவைத்துக் கொண்டனர். ஒரு சில வீரர்களை அணியிலிருந்து விடுவித்தனர். எனவே விடுவிக்கப்பட்ட வீரர்களுக்கான இடங்களை நிரப்பும் வகையில் ஏலம் நடைபெறுகிறது.

இந்த ஆண்டு ஏலத்திற்கான முக்கிய வீரர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரரான நடராஜன், ஐபிஎல் நட்சத்திரங்களான சாய் கிஷோர் மற்றும் சந்தீப் வாரியர் போன்றவர்கள் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com