17வது கோப்பை யாருக்கு? 2024 ஐபிஎல் தொடருக்கான அட்டவணை நாளை அறிவிப்பு - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

2024 ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், முழு தொடருக்குமான அட்டவணை நாளை அறிவிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ipl
iplX

உலகத்தின் நம்பர் 1 டி20 லீக் தொடரான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 17வது எடிசன் மார்ச் மாதம் தொடங்கவிருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK),

மும்பை இந்தியன்ஸ் (MI),

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR),

ராஜஸ்தான் ராயல்ஸ் (RR),

சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் (SRH),

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB),

குஜராத் டைட்டன்ஸ் (GT),

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG),

பஞ்சாப் கிங்ஸ் (PBKS),

டெல்லி கேபிடல்ஸ் (DC) முதலிய 10 அணிகள் 17வது ஐபிஎல் கோப்பையை கையில் ஏந்தும் கனவோடு தயாராகி வருகின்றனர்.

ஏற்கனவே சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 கோப்பைகளை கைவசம் வைத்திருக்கும் நிலையில், கொல்கத்தா அணி 2, ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத், டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் தலா ஒருமுறையும் கோப்பையை வென்று அடுத்த கோப்பைக்காக காத்திருக்கின்றனர். அதேவேளையில் மீதமிருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளும் தங்களுடைய முதல் கோப்பைக்காக காத்திருக்கின்றனர்.

IPL Auction
IPL Auctionpt desk

ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்ககூடிய 2024 ஐபிஎல் தொடரின் அட்டவணையானது நாளை அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ipl
“MS தோனியால் கிரிக்கெட் வாழ்க்கையை இழந்தோம்” குற்றச்சாட்டு வைத்த முன்னாள் வீரர்கள்..10 பேரின் கதை!

நாளை ஐபிஎல் அட்டவணை வெளியீடு! ஜியோ சினிமாவில் நேரலை!

2024 ஐபிஎல் தொடரானது மார்ச் மாதம் நடைபெறும் நிலையில், பிப்ரவரி மாதம் முடிவை எட்டியிருக்கும் நிலையிலும் ”நாடாளுமன்ற தேர்தல் மற்றும் டி20 உலகக்கோப்பையை” கருத்தில் கொண்டு தேதிகளை முடிவுசெய்யும் சிக்கலால் அட்டவணை தாமதப்படுத்தப்பட்டு வருகிறது.

Tata IPL Sponsorship
Tata IPL Sponsorship

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தேதிகளை பார்த்த பிறகே ஐபிஎல் தொடரின் முழு அட்டவணையும் அறிவிக்கப்படும் என்று ஐபிஎல் சேர்மேன் தெரிவித்தார். அப்படியில்லையெனில் பகுதி பகுதியாக அட்டவணை வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் நாளை ஐபில் தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்படவிருப்பதாகவும், ஜியோ சினிமாவில் மாலை 5 மணிக்கு நேரலை செய்யப்படவிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. டி20 உலகக்கோப்பை ஜுன் மாதம் 1ம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், மே மாதம் இறுதிக்குள் ஐபிஎல் தொடரை முடிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ipl
"ஜெய்ஸ்வாலை பாராட்ட மாட்டேன்!" - உலகசாதனை படைத்த போதும் மறுத்த கேப்டன் ரோகித்! என்ன காரணம்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com