\
இந்தியா - இங்கிலாந்து
இந்தியா - இங்கிலாந்துweb

இன்று IND vs ENG டி20 போட்டி.. சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைக்குமா? HotStar-ல் பார்க்கலாமா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று இரவு இங்கிலாந்து மண்ணில் நடைபெற உள்ளது.
Published on
Summary

அயர்லாந்து டி20 தொடரில் 0-2 என ஒயிட்வாஷ் ஆன இந்திய அணி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இன்று முதல் டி20 போட்டியை ரிவர்சைடு மைதானத்தில் இரவு 10 மணிக்கு விளையாடுகிறது. பந்துவீச்சுக்கு சாதகமான பிச்சில் இந்தியா பாசிட்டிவ் தொடக்கம் பெற வேண்டிய அவசியம் உள்ளது. தொடக்க வீரர்கள் சோபிக்காத நிலையில், ப்ரைம் ஃபார்மில் இருக்கும் வைபவ் சூர்யவன்ஷிக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அயர்லாந்துக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் 0-2 என ஒயிட்வாஷ் ஆன இந்திய அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. அங்கு 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்கள் நடைபெறவிருக்கும் நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெறவிருக்கிறது.

இந்திய டி20 அணி
இந்திய டி20 அணி

இங்கிலாந்து ரிவர்சைடு மைதானத்தில் தொடங்கவிருக்கும் முதல் போட்டி இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு நடைபெறவிருக்கிறது. அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை மோசமாக இழந்திருக்கும் இந்திய அணிக்கு இந்தத்தொடரில் பாசிட்டிவாக தொடங்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால் பந்துவீச்சுக்கு சாதகமான ரிவர்சைடு மைதானத்தின் ஆடுகளம் இந்தியாவுக்கு சவாலாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

RR Batsman Vaibhav Sooryavanshis bold warning to rivals
வைபவ் சூர்யவன்ஷிpt web

இதற்கிடையில் வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியில் அறிமுகம் ஆவாரா என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அயர்லாந்து தொடரில் இந்திய தொடக்க வீரர்கள் சோபிக்காத நிலையில், தன்னுடைய ப்ரைம் ஃபார்மில் இருக்கும் சூர்யவன்ஷி இறக்கப்படுவாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. வருண் சக்கரவர்த்தி இந்திய அணிக்கு திரும்பியிருப்பது மற்றொரு பாசிட்டிவான விசயமாக இருக்கிறது.

இந்தியா - இங்கிலாந்து
டெஸ்ட் போட்டி| 34 ஆண்டுக்கு பின் வரலாற்று வெற்றி.. வங்கதேசத்தை வீழ்த்தி ஜிம்பாப்வே சாதனை!

HotStar-ல் பார்க்கலாமா?

இந்தியா-இங்கிலாந்து டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்காக டெலிகாஸ்ட் உரிமத்தை சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் பெற்றுள்ளது. ஆனால் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டின் நேரடி ஒளிபரப்பும் சோனி LIV மற்றும் ஜியோஹாட்ஸ்டார் செயலிகளிலும் பார்க்கலாம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com