\
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே வரலாற்று வெற்றி
ஜிம்பாப்வே வரலாற்று வெற்றிcricinfo

டெஸ்ட் போட்டி| 34 ஆண்டுக்கு பின் வரலாற்று வெற்றி.. வங்கதேசத்தை வீழ்த்தி ஜிம்பாப்வே சாதனை!

ஜிம்பாப்வே மற்றும் வங்கதேச அணிகள் மோதிய ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் 400 ரன்கள் குவித்த ஜிம்பாப்வே வங்கதேசத்தை தோற்கடித்து அசத்தியது.
Published on

ஜிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வங்கதேச அணி 1 டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடர்களில் விளையாடுகிறது.

முதலில் டெஸ்ட் போட்டி நடைபெற்ற நிலையில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி ஜிம்பாப்வேவின் 20 வயது இளம் வேகப்பந்துவீச்சாளர் நியூமன் நியாமுரியின் அசத்தலான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 140 ரன்களுக்கு சுருண்டது. அபாரமாக பந்துவீசிய நியாமுரி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இன்னசண்ட் கையா
இன்னசண்ட் கையா

தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 410 ரன்கள் என்ற மிகப்பெரிய டோட்டலை அடித்தது. தொடக்க வீரரான இன்னசண்ட் கையா 140 ரன்கள் குவித்து வலுவான ஸ்கோரை எடுத்துவந்தார்.

இந்தசூழலில் 2வது இன்னிங்ஸில் விளையாடிய வங்கதேச அணி இந்தமுறை வெறும் 185 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்தது. 85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஜிம்பாப்வே அணி தங்களுடைய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்தது. 1992 முதல் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிவரும் ஜிம்பாப்வே அணி 34 ஆண்டுக்கு பின் தங்களுடைய பெரிய வெற்றியை கண்டுள்ளது.

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே வரலாற்று வெற்றி
மகளிர் டி20 WC அரையிறுதி| 125 ரன்கள் மட்டுமே அடித்த WI.. 8வது FINAL செல்லும் ஆஸ்திரேலியா!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com