\
sa vs aus
sa vs ausx

முதல் டெஸ்ட்| ரென்ஷா மாஸ்டர் கிளாஸ்.. ஹசல்வுட் 5-fer.. தென்னாப்ரிக்காவை நசுக்கிய ஆஸி!

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்று அசத்தியது.
Published on: 
Summary

டர்பனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் மேட் ரென்ஷா 190 ரன்கள் அடித்து மாஸ்டர் கிளாஸ் காட்டினார். தென்னாப்பிரிக்கா 206 ரன்களுக்கு சுருட்டப்பட்டதால், ஆஸ்திரேலியா 214 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா, ரென்ஷாவை ஆட்டநாயகனாக தேர்வு செய்தது.

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் ஆஸ்திரேலியா அணி 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2-1 என தென்னாப்பிரிக்கா வென்ற நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டர்பன் மைதானத்தில் நடைபெற்றது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 10 போட்டிகளில் 8-ல் வென்று முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவை எதிர்த்து 2வது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்கா மோதுவதால் எதிர்ப்பார்ப்பு அதிகரித்தது. அதிலும் கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா சாம்பியன் பட்டம் வென்றதால், கங்காருகள் அதற்கு பழிவாங்குவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பும் இருந்தது.

matt renshaw
matt renshawcricket australia / x

இப்படி எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர்கள் திணறடித்தனர். ஆனால் ஆஸ்திரேலியாவின் அனைத்து சூப்பர் ஸ்டார் வீரர்களும் சொதப்பினாலும் 9 ஆண்டுகளுக்கு சதமடித்த மேட் ரென்ஷா புதிய ஹீரோவாக உருவெடுத்தார். முதல் இன்னிங்ஸில் அவரடித்த 190 ரன்கள் ஆஸ்திரேலியாவை 390 ரன்கள் என்ற வலுவான டோட்டலுக்கு அழைத்துச்சென்றது.

தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியால் 284 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. 2வது இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலியா 314 ரன்கள் அடித்து டிக்ளார் செய்தது. 421 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியில் அனைவரும் சொதப்ப எய்டன் மார்க்ரம் மட்டும் 75 ரன்கள் அடித்து போராடினார். ஆனால் 206 ரன்களுக்கு சுருட்டிய ஆஸ்திரேலியா 214 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 4வது இன்னிங்ஸில் மட்டும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹசல்வுட் அசத்தினார்.

பேட்டிங்கில் 190 + 84 ரன்கள் அடித்த ரென்ஷா, பந்துவீச்சிலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய தென்னாப்பிரிக்காவின் கதையை தனியாளாக முடித்தார். 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது. ஆட்டநாயகனாக மேட் ரென்ஷா தேர்வுசெய்யப்பட்டார்.

sa vs aus
190 ரன்கள்.. 24 ஆண்டுகளுக்கு பின்.. தென்னாப்பிரிக்கா மண்ணில் ஆஸ்திரேலியா வீரர் ரென்ஷா சாதனை!
sa vs aus
ஒரு வருடத்தில் அதிக சிக்சர்கள்.. SKY சாதனையை சமன்செய்த அபிஷேக் சர்மா!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com