36 வருசமாச்சு ரஞ்சிக்கோப்பை வென்று! அரையிறுதியில் மும்பை - தமிழ்நாடு மோதல்! யாருக்கு வாய்ப்பு?

1988-க்கு பிறகு 36 வருடங்களாக கோப்பை வெல்லாமல் இருந்தாலும், சாய் கிஷோர் தலைமையிலான தமிழ்நாடு அணி கோப்பை வெல்லும் நம்பிக்கையை கொண்டுள்ளது.
mumbai - tamilnadu
mumbai - tamilnaduweb

2024 ரஞ்சிக்கோப்பை தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஜனவரி 5ம் தேதி தொடங்கிய 89வது ரஞ்சி சீசன், தற்போது அரையிறுதி போட்டிகளை எட்டியுள்ளது. கோப்பைக்காக 38 அணிகள் மோதிய நிலையில், சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு, மும்பை, விதர்பா, கர்நாடகா, பரோடா, சவுராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திரா ஆகிய 8 அணிகள் காலிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.

விறுவிறுப்பாக நடைபெற்ற நான்கு காலிறுதி ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட “தமிழ்நாடு, மும்பை, விதர்பா மற்றும் மத்திய பிரதேச அணிகள்” முதலிய 4 அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. 7 ஆண்டுகளாக அரையிறுதிசுற்றுக்கு கூட தகுதிபெறாத தமிழ்நாடு அணியை கேப்டன் சாய் கிஷோர் அழைத்துச்சென்றுள்ளார்.

இந்நிலையில், அரையிறுதிப்போட்டியில் பலம்வாய்ந்த மும்பை அணியை எதிர்கொண்டு விளையாடவுள்ளது தமிழ்நாடு அணி. அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணியில் இந்தியாவிற்காக விளையாடிய அனுபவம் வாய்ந்த ”ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், பிரித்வி ஷா, ஷர்துல் தாக்கூர்” முதலிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல் ப்ரைம் ஃபார்மில் இருந்துவரும் யு-19 வீரர் முஷீர் கானும் இடம்பெற்றுள்ளார். 41 முறை கோப்பை வென்ற சாம்பியன் அணியை எதிர்த்து 36 ஆண்டுகால கனவை எப்படி தமிழ்நாடு எட்டிப்பிடிக்க போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

mumbai - tamilnadu
“உனக்கு என்ன பைத்தியமா ரோகித்?” Rohit-குறித்து அரிதான கதையை வெளிப்படுத்திய சிறுவயது பயிற்சியாளர்!

90 வருட ரஞ்சிக்கோப்பை வரலாற்றில் 2 முறை மட்டுமே கோப்பை!

1934ம் ஆண்டு தொடங்கி 90 ஆண்டுகளை கடந்து நடந்துகொண்டிருக்கும் ரஞ்சிக்கோப்பை தொடரில் தமிழ்நாடு அணி 1955 மற்றும் 1988 ஆண்டுகள் என இரண்டு முறை மட்டுமே கோப்பையை வென்றுள்ளது. மொத்தமாக 11 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கும் தமிழ்நாடு 2 முறை வெற்றியும், 9 முறை தோல்வியையும் பதிவுசெய்துள்ளது. 36 ஆண்டுகளாக கோப்பை வெல்லாத வடுக்களை சுமந்துகொண்டிருக்கும் தமிழ்நாடு அணியை சாய் கிஷோர் கோப்பைக்கு அழைத்துசெல்லும் முனைப்போடு சென்றுகொண்டுள்ளார்.

நடப்பு 2024 ரஞ்சிக்கோப்பை தொடரில் குஜராத் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியை சந்தித்திருக்கும் தமிழ்நாடு அணி, மற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றியை பதிவுசெய்து நல்ல ஃபார்மோடு அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் நல்ல ஃபார்மில் இருந்துவருகிறார். மற்ற வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கையுடன் இருந்துவருகின்றனர். 7 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிக்கு சென்றிருக்கும் தமிழ்நாடு அணி, அதிகமுறை ரஞ்சிக்கோப்பை வென்ற அணியான மும்பையை எதிர்கொண்டு விளையாடவிருக்கிறது.

mumbai - tamilnadu
கடைசி 1 விக்கெட்டுக்கு 232 ரன்கள் பார்ட்னர்ஷிப்! 11வது வீரராக இறங்கி சதமடித்த CSK பவுலர்! #Miracle

ஸ்ரேயாஸ் ஐயர் கம்பேக்கால் வலுபெற்றுள்ள மும்பை அணி!

ரஞ்சிக்கோப்பையை பொறுத்தவரையில் ரஞ்சி கிங் அணி என்றால் அது மும்பை அணி தான், 41 முறை கோப்பை வென்று வரலாறு படைத்திருக்கும் அந்த அணி 15 முறை தொடர்ச்சியாக கோப்பைகளை வென்ற ஒரேஅணி என்ற பெருமையையும் கொண்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு கடைசியாக கோப்பை வென்ற அந்த அணி 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கோப்பை வெல்லும் முனைப்பில் களம்கண்டுள்ளது.

ரஹானே
ரஹானே

அஜிங்கியா ரஹானே தலைமையில் ”பிரித் வி ஷா, முஷீர் கான், ஹர்திக் தாமோர், ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே” முதலிய ஸ்டார் வீரர்கள் இருந்த நிலையில், தற்போது ஸ்ரேயாஸ் ஐயரும் அரையிறுதிக்கான மும்பை அணியில் இணைய உள்ளதாக கிறிக்பஸ் தெரிவித்துள்ளது.

Jasprit Bumrah - Shreyas Iyer
Jasprit Bumrah - Shreyas IyerTwitter

இந்நிலையில் பலம் வாய்ந்த அணியாக மும்பை அணி மாறியுள்ளது. மிகப்பெரிய கனவோடு அரையிறுதிக்குள் நுழைந்திருக்கும் தமிழ்நாடு அணி மும்பையை வெல்ல என்னசெய்யப்போகிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். இரண்டு அணிகளுக்கும் இடையேயான அரையிறுதி போட்டி மார்ச் 2ம் தேதி தொடங்கவிருக்கிறது. மற்றொரு அரையிறுதிபோட்டியில் விதர்பா அணி மத்திய பிரதேச அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.

mumbai - tamilnadu
சர்ஃபராஸை மறைமுகமாக தாக்கி பேசிய சேவாக்! தோனியை வைத்து பதில் அட்டாக் செய்த ரசிகர்கள்! என்ன நடந்தது?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com