ரஞ்சி அரையிறுதி: 17 ரன்னுக்கு 4 விக்கெட் காலி; மும்பை அணிக்கு எதிராக தமிழ்நாடு தடுமாற்றம்!

2024 ரஞ்சிக்கோப்பை அரையிறுதிப்போட்டிகள் இன்று தொடங்கியுள்ள நிலையில், மும்பை அணிக்கு எதிராக தமிழ்நாடு முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது.
தமிழ்நாடு - மும்பை
தமிழ்நாடு - மும்பைBCCI

2024 ரஞ்சிக்கோப்பை தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஜனவரி 5ம் தேதி தொடங்கிய 89வது ரஞ்சி சீசன், தற்போது அரையிறுதி போட்டிகளை எட்டியுள்ளது. கோப்பைக்காக 38 அணிகள் மோதிய நிலையில், சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு, மும்பை, விதர்பா, கர்நாடகா, பரோடா, சவுராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திரா ஆகிய 8 அணிகள் காலிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.

விறுவிறுப்பாக நடைபெற்ற நான்கு காலிறுதி ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு, மும்பை, விதர்பா மற்றும் மத்திய பிரதேச அணிகள் முதலிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றன. 7 ஆண்டுகளாக அரையிறுதிசுற்றுக்கு கூட தகுதிபெறாத தமிழ்நாடு அணியை கேப்டன் சாய் கிஷோர் அரையிறுதிச்சுற்றுக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

சாய் கிஷோர்
சாய் கிஷோர்

இந்நிலையில், அரையிறுதிப்போட்டியில் பலம்வாய்ந்த மும்பை அணியை எதிர்கொண்டு விளையாடுகிறது தமிழ்நாடு அணி. அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணியில் இந்தியாவிற்காக விளையாடிய அனுபவம் வாய்ந்த ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், பிரித்வி ஷா, ஷர்துல் தாக்கூர் முதலிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல் ப்ரைம் ஃபார்மில் இருந்துவரும் யு-19 வீரர் முஷீர் கானும் இடம்பெற்றுள்ளார். 41 முறை கோப்பை வென்ற சாம்பியன் அணியை எதிர்த்து 36 ஆண்டுகால கனவை எப்படி தமிழ்நாடு எட்டிப்பிடிக்க போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ்நாடு - மும்பை
அந்த வடிவத்திற்கு சர்ஃபராஸ் கான் சரிபட்டு வரமாட்டார்! - சவுரவ் கங்குலி

தமிழ்நாடு அணிக்கு திரும்பிய வாசிங்டன், விஜய் ஷங்கர்!

தமிழ்நாடு அணிக்காக அரையிறுதிப்போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார் வாசிங்டன் சுந்தர். அதேபோல தமிழ்நாடு ஆல்ரவுண்டர் வீரரான விஜய் ஷங்கரும் அரையிறுதிப்போட்டிக்கு திரும்பியுள்ளார். சாய் சுதர்சன், என் ஜகதீசன், சாய் கிஷோர், வாசிங்டன் சுந்தர், விஜய் ஷங்கர், பாபா இந்திரஜித் முதலிய டாப் வீரர்கள் தமிழ்நாடு அணியை இறுதிப்போட்டிக்கு எடுத்துச்செல்வார்களா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

tamil nadu team
tamil nadu team

தமிழ்நாடு ஆடும் 11 வீரர்கள் அணி:

என் ஜெகதீசன் (விக்.கீப்பர்), சாய் சுதர்சன், பாபா இந்திரஜித், பிரதோஷ் பால், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர் (கேப்டன்), விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர், எம் முகமது, எஸ் அஜித் ராம், சந்தீப் வாரியர், குல்தீப் சென்.

தமிழ்நாடு - மும்பை
”IPL தொடரால் முதல்தர கிரிக்கெட் தேவையில்லை என நினைக்கிறார்கள்”! - BCCI முடிவில் கபில்தேவ் மகிழ்ச்சி!

மும்பை அணிக்கு திரும்பிய ஸ்ரேயாஸ், ஷர்துல் தாக்கூர்!

மும்பை அணிக்கான அரையிறுதிப்போட்டியில் விளையாடுவதற்காக ஸ்டார் வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஷர்துல் தாக்கூர் இருவரும் திரும்பியுள்ளனர். ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், பிரித்வி ஷா, ஷர்துல் தாக்கூர், துஷார் தேஸ்பாண்டே, முஷீர் கான், ஹர்திக் தாமோர் முதலிய கிளாஸ் வீரர்கள் மும்பை அணியை 7 வருடங்களுக்கு பிறகு கோப்பைக்கு வழிநடத்த தயாராகவுள்ளனர்.

rahane - shreyas
rahane - shreyas

மும்பை ஆடும் 11 வீரர்கள் அணி:

பிருத்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர், பூபன் லால்வானி, அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), முஷீர் கான், ஷம்ஸ் முலானி, ஹர்திக் தாமோர் (விக்.கீப்பர்), ஷர்துல் தாக்கூர், தனுஷ் கோட்டியான், மோகித் அவஸ்தி, துஷார் தேஷ்பாண்டே.

தமிழ்நாடு - மும்பை
"இந்தியாவுக்காக ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டாம்.."- இஷான் & ஸ்ரேயாஸை விளாசிய கவாஸ்கர்?

17 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறும் தமிழ்நாடு அணி!

தமிழ்நாடு மற்றும் மும்பை இரண்டு அணிகளுக்கும் இடையேயான 2024 ரஞ்சிக்கோப்பை அரையிறுதிப்போட்டியானது மும்பையில் உள்ள ஷரத் பவார் கிரிக்கெட் அகாடமி BKC மைதானத்தில் தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்து விளையாடிவருகிறது.

முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தமிழ்நாடு ஏன் பேட்டிங்கை தேர்வுசெய்தோம் என்று நினைத்து வருத்தப்படும் அளவு ஒரு மோசமான தொடக்கத்தை பெற்றுள்ளது. புதிய பந்தின் ஸ்விங்கிங் தன்மையை சரியாக பயன்படுத்திக்கொண்ட மும்பை பவுலர்கள் ஷர்துல் தாக்கூர், மோஹித் அவஸ்தி மற்றும் துஷார் தேஸ்பாண்டே மூன்று பேரும் விக்கெட் வேட்டை நடத்தினர். தொடக்க வீரர் சாய்சுதர்சனை LBW மூலம் 0 ரன்னில் ஷர்துல் தாக்கூர் வெளியேற்ற, ஜகதீசனை 4 ரன்னில் அவஸ்தி வெளியேற்றினார்.

10 ரன்களுக்கே அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்த தமிழ்நாடு அணியில், 3வது விக்கெட்டுக்கு கேப்டன் சாய் கிஷோர் களமிறங்கினார். ஆனால் நல்ல ஃபார்மில் இருந்துவரும் துஷார் தேஷ்பாண்டே பிரதோஷ் பாலை 8 ரன்னில் வெளியேற்றிய அதேநேரத்தில் கேப்டன் சாய் கிஷோரை 1 ரன்னில் போல்டாக்கி வெளியேற்றினார். 17 ரன்களுக்கே 4 விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது தமிழ்நாடு அணி. பாபா இந்திரஜித் மற்றும் விஜய் ஷங்கர் இருவரும் களத்தில் விளையாடிவருகின்றனர்.

மற்றொரு அரையிறுதிப்போட்டியில் மத்தியப் பிரதேச அணிக்கு எதிராக விதர்பா அணி 1 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்களுடன் பேட்டிங் செய்துவருகிறது.

தமிழ்நாடு - மும்பை
36 வருசமாச்சு ரஞ்சிக்கோப்பை வென்று! அரையிறுதியில் மும்பை - தமிழ்நாடு மோதல்! யாருக்கு வாய்ப்பு?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com