T20 WC| தென்னாப்ரிக்கா அணிக்கு 176 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து!
2026 டி20 உலகக்கோப்பையில், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டியில், நியூசிலாந்து 176 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. ஃபின் ஆலன், மார்க் சாப்மன் மற்றும் டேரில் மிட்செல் சிறப்பாக விளையாடினர். தென்னாப்பிரிக்கா அணியின் மார்கோ யான்சன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
2026 டி20 உலகக்கோப்பை தொடரானது பரபரப்பாக நடந்துவருகிறது. இன்று 3 போட்டிகள் நடைபெறும் நிலையில் முதலிரண்டு போட்டிகளில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள், ஓமன் மற்றும் ஸ்காட்லாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றன.
இந்நிலையில் இன்றைய நாளின் கடைசி போட்டி பலம் வாய்ந்த நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.
167 ரன்கள் அடித்த நியூசிலாந்து..
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவரில் வெறும் 176 ரன்களை அடித்தது.
நியூசிலாந்து அணியில் ஃபின் ஆலன் 17 பந்தில் 31 ரன்னும், மார்க் சாப்மன் 26 பந்தில் 48 ரன்களும், டேரில் மிட்செல் 32 ரன்களும் அடித்து அசத்தினர். சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மார்கோ யான்சன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

