9 பந்தில் 35 ரன்கள் விளாசிய அயர்லாந்து வீரர்
9 பந்தில் 35 ரன்கள் விளாசிய அயர்லாந்து வீரர்cricinfo

T20 WC| 388 ஸ்ட்ரைக்ரேட்.. 9 பந்தில் 35 ரன்கள் விளாசல்.. 3 அசத்தல் சாதனைகள் படைத்த அயர்லாந்து!

2026 டி20 உலகக்கோப்பை தொடரில் 235 ரன்கள் குவித்து அசத்தியது அயர்லாந்து அணி.
Published on
Summary

அயர்லாந்து அணி, 2026 டி20 உலகக்கோப்பையில் ஓமனை எதிர்த்து 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் லோர்கன் டக்கர் 51 பந்தில் 94 ரன்கள் குவித்து அசத்தினார். ஜார்ஜ் டோக்ரெல் 9 பந்தில் 35 ரன்கள் அடித்து 388 ஸ்ட்ரைக்ரேட்டில் சாதனை படைத்தார். கரேத் டெலானி 56 ரன்கள் அடித்து 13 சிக்சர்களுடன் புதிய சாதனை படைத்தார்.

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையின் 10ஆவது சீசன், கடந்த 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 20 அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விளையாடி வரும் நிலையில், இன்றைய போட்டியில் அயர்லாந்து மற்றும் ஓமன் அணிகள் மோதின.

ஓமன் அணி
ஓமன் அணி

இலங்கையில் உள்ள கொழும்புவில் பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 235 ரன்கள் குவித்தது. 10 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய அயர்லாந்து கேப்டன் லோர்கன் டக்கர் 51 பந்தில் 94 ரன்கள் குவித்து மிரட்டினார்.

அயர்லாந்து
அயர்லாந்து

236 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிய ஓமன் அணி, அயர்லாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18 ஓவரில் 139 ரன்களுக்கே சுருண்டு படுதோல்வியை சந்தித்தது. 96 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அயர்லாந்து அணி, நடப்பு டி20 உலகக்கோப்பையில் தங்களுடைய முதல் வெற்றியை பதிவுசெய்தது.

9 பந்தில் 35 ரன்கள் விளாசிய அயர்லாந்து வீரர்
1983, 2007 வரிசையில் 2026..? ஜிம்பாப்வே வென்றால் இந்தியாவிற்கு கோப்பையா..? ஆச்சரிய புள்ளி விவரம்!

மிரட்டலான சாதனைகள்..

அயர்லாந்து இன்னிங்ஸில் கடைசியாக வந்து அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஜார்ஜ் டோக்ரெல், 9 பந்தில் 5 சிக்சர்களை பறக்கவிட்டு 388 ஸ்ட்ரைக்ரேட்டில் 35 ரன்களை விளாசி அசத்தினார். இதன்மூலம் டி20 உலகக்கோப்பையில் ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்சர்கள் அடித்த அயர்லாந்து வீரராக சாதனை படைத்தார். இதற்கு முன்னர் 4 சிக்சர்கள் அடித்திருந்த ஓ பிரைன் சாதனையை முறியடித்தார்.

லோர்கன் டக்கர்
லோர்கன் டக்கர்

அதேபோல 30 பந்தில் 4 சிக்சர்கள் 3 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் அடித்திருந்த அயர்லாந்து வீரர் கரேத் டெலானி, டி20 உலகக்கோப்பை தொடரில் மொத்தமாக இதுவரை 13 சிக்சர்களை அடித்து சாதனை படைத்தார். இதற்கு முன்பு ஒரு அயர்லாந்து வீரர் 11 சிக்சர்களை அடித்ததே உலகக்கோப்பையில் சாதனையாக இருந்தது.

அயர்லாந்து
அயர்லாந்து

மேலும் 94 ரன்கள் அடித்த கேப்டன் லோர்கன் டக்கர் அயர்லாந்துக்காக உலகக்கோப்பையில் அதிக தனிநபர் ஸ்கோர் அடித்த வீரராக வரலாறு படைத்தார்.

9 பந்தில் 35 ரன்கள் விளாசிய அயர்லாந்து வீரர்
”அபிஷேக் சர்மா பந்தை பார்த்து சுத்தும் ஒரு சாதாரண வீரர்..” - முன்னாள் பாகிஸ்தான் வீரர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com