T20 WC india Vs WI match updates
indiax page

T20 WC | நாளை IND - WI மோதல்.. மழைக்கு வாய்ப்பா? Semi Final செல்வது யார்?

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவு அணிகள் நாளை கொல்கத்தாவில் மோதவுள்ளன.
Published on

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவு அணிகள் நாளை கொல்கத்தாவில் மோதவுள்ளன. இதில் வெற்றிபெறும் அணி, நேரிடையாக அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், தற்போது எட்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுப் பிரிவில் விளையாடி வருகின்றன. இதில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுக்குள் நுழைந்துள்ளன. மற்ற அணிகள், அரையிறுதிக்குச் செல்லும் முனைப்புடன் விளையாடி வருகின்றன. அந்த வகையில், இந்தியாவும் பாகிஸ்தானும் அரையிறுதி வாய்ப்பை எட்டுமா என்பதே பல ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. காரணம், அவையிரண்டும் தன்னுடைய கடைசிப் போட்டியிலும் அதிக ரன் ரேட்டில் வெல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் மோதும் நாளை நடைபெற உள்ளது. ஒருவேளை இந்தப் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டால், யார் அரை இறுதிக்கு முன்னேறுவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

india
indiax page

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் தலா இரண்டு புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளதால், இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக அரை இறுதிக்கு முன்னேறும். போட்டியில் முடிவு கிடைத்தால், ரன் ரேட் என்பது தேவையில்லை. ஏனெனில் வெல்லும் அணிக்கு நான்கு புள்ளிகள் கிடைக்கும். அதனால் வெற்றிபெற்ற அணி சுலபமாய் அரையிறுதிக்குச் சென்றுவிடும். அதேநேரத்தில், மழை போன்ற காரணங்களால் போட்டி கைவிடப்பட்டால், புள்ளிகள் இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும். அப்படி நடக்கும் பட்சத்தில், மேற்கிந்திய தீவுகள் (+1.791) சிறந்த நிகர ஓட்ட விகிதத்தால் அரை இறுதிக்குச் செல்லும். இந்தியாவின் ரன் ரேட் -0.100 என்ற அளவில் உள்ளதால், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி வெளியேற்றப்படும். எனினும், நாளை நடைபெறும் கொல்கத்தாவில் மழைக்கு வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியா முழுமையான போட்டியை எதிர்கொள்ளும்.

T20 WC india Vs WI match updates
T20 WC | அரையிறுதிக்குள் நுழையுமா பாகிஸ்தான்? வாய்ப்பு எப்படி?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com