சையது முஷ்டாக் அலி தொடர் |சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி.. கர்நாடகாவை வீழ்த்திய திரிபுரா!
சையது முஷ்டாக் அலி தொடரில் கர்நாடகா மற்றும் திரிபுரா ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், திரிபுரா அணி சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.
நாடு முழுவதும் சையத் முஷ்டாக் அலி டிராபி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், 32 அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றன. அதன்படி, கர்நாடகா மற்றும் திரிபுரா ஆகிய அணிகளுக்கு இடையே இன்று பலப்பரீட்சை நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய கர்நாடக அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது. அவ்வணியில் பி.ஆர்.சரத் 44 ரன்கள் எடுத்தார். பின்னர், 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திரிபுராவும் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 197 ரன்களையே எடுத்தது. மணிசங்கர் மட்டும் 69 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து சூப்பர் ஓவர் முறை பின்பற்றப்பட்டது. அதன்படி முதலில் பேட் செய்த கர்நாடக அணி, ஒரு ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 18 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய திரிபுரா அணி விக்கெட் இழப்பின்றி 22 ரன்கள் எடுத்து சூப்பரி ஓவரில் த்ரில் வெற்றிபெற்றது. எனினும், இரு அணிகளும் தலா 7 போட்டிகளில் 2இல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. ஆனாலும் புள்ளிப் பட்டியலில் கர்நாடகா 4வது இடத்தில் உள்ளது. திரிபுரா 7வது இடத்தில் உள்ளது.

