IPL 2024 | மைதானத்தில் நடந்த ட்விஸ்ட்.. பேட் கம்மின்ஸ் எடுத்த தைரியமான முடிவு - கைமேல் கிடைத்த பலன்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் ராஜஸ்தானை எளிதில் வீழ்த்திய ஹைதராபாத் அணி, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
ராஜஸ்தான் - ஹைதராபாத்
ராஜஸ்தான் - ஹைதராபாத்முகநூல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் ராஜஸ்தானை எளிதில் வீழ்த்திய ஹைதராபாத் அணி, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி கிளாசனின் அரைசதத்தால், ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு யாஷாஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியான தொடக்கம் தந்தார்.

21 பந்துகளில் 42 ரன்கள் விளாசி ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்ததும், ஆட்டம் ஹைதராபாத் அணியின் பக்கம் திரும்பியது. கேப்டன் சஞ்சு சாம்சன், பராக், ஹெட்மயர் உள்ளிட்ட வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஒருபக்கம் ஜுரெல் மட்டும் போராடினார். மற்ற வீரர்கள் யாரும் கைகொடுக்காததால், ராஜஸ்தான் அணி 139 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. 36 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதே மைதானத்தில் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை ஹைதராபாத் அணி எதிர்கொள்கிறது.

ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தவர்கள் ஹைதராபாத் அணியின் ஷபாஸ் அஹ்மத் மற்றும் அபிஷேக் ஷர்மா தான். இருவரும் சேர்ந்து கொத்தாக 5 விக்கெட்டுகளை அள்ளினார்கள். ஷபாஸ் அஹ்மத் 4 ஓவர்களில் 23 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அவர் மொத்தம் 13 டாட் பந்துகளை வீசினார் என்பதே எவ்வளவு சிறப்பாக வீசியுள்ளார் என்பதை காட்டும். இத்தனைக்கு ஷபாஸ் இம்பேக்ட் பிளேயராகத்தான் விளையாடினார் என்பது ஆச்சர்யமான விஷயம். அதேபோல், அதிரடி பேட்ஸ்மேனான அபிஷேக் ஷர்மா இந்த முறை பேட்டிங்கில் சொதப்பினாலும் பந்துவீச்சில் 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இவர் பந்துவீச்சில் சிக்ஸர் கூட விட்டுக்கொடுக்கவில்லை. ஜெய்ஸ்வால் களத்தில் இருக்கும் வரை ராஜஸ்தான் அணியின் கையே ஓங்கி இருந்தது. ஆனால், ஷபாஸ் - அபிஷேக் ஜோடி ஜெய்ஸ்வால், சாம்சன், ரியான் பராக், அஸ்வின், ஹெட்மயர் என மொத்தமாக 5 பேரை தட்டித் தூக்கிவிட்டர்.

ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ்க்கு தான் இந்த பெருமையெல்லாம் சென்றுசேரும். கம்மின்ஸ் எடுத்த சிறப்பான முடிவுதான் அந்த அணிக்கு வெற்றிக்கு வித்திட்டது. அதாவது, ஹைதராபாத் அணி பேட்டிங் செய்த போது பந்து பெரிதாக திரும்ப வில்லை.

ஓரளவுக்கு பனியும் இருந்தது. ஆனால், ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்யும் போது அதிக பனி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடந்ததோ வேறு. ஆம், இரண்டாவது இன்னிங்ஸில் சுத்தமாக பனி இல்லை. அனால், பவர் பிளேவுக்கு பின்னர் பந்து நன்றாகவே திரும்பியது.

ராஜஸ்தான் - ஹைதராபாத்
ராஜஸ்தான் தோல்விக்கு RCB தான் காரணம்.. ஒரேயொரு முடிவால் வீழ்ந்த RR! 3வது முறையாக FINAL சென்றது SRH!

ஜெய்ஸ்வால் விக்கெட்டை ஷபாஸ் அஹ்மத் வீழ்த்தியை பார்த்த பின்னர் உடனே அபிஷேக் ஷர்மாவை பந்துவீச அழைத்தார் பேட் கம்மின்ஸ். நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக அளவில் பந்துவீசாத ஒருவர்தான் அபிஷேக் ஷர்மா. அதாவது இதற்கு முன்பு ஒரே ஒரு போட்டியில் தான் அவர் பந்துவீசினார். ஆனால், சூழலை கருதி அவரை கொண்டு விக்கெட்டுகளை அள்ளினார் பேட் கம்மின்ஸ்.

நன்றாக பந்துவீசி வந்த நடராஜன், புவனேஷ்வர் குமார் உள்ளிட்டோருக்கு தலா ஒரு ஓவர் குறைத்து அபிஷேக் ஷர்மாவை பந்துவீச வைத்ததே பேட் கம்மின்ஸ் செய்த ராஜ தந்திரம். அதற்கு கைமேல் பலனாக ஐபிஎல் இறுதிப்போட்டியில் மீண்டுமொரு முறை விளையாடும் வாய்ப்பு ஹைதராபாத் அணிக்கு கிடைத்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் போட்டியில் பேட் கம்மின்ஸ் படை ஸ்ரேயாஸ் ஐயரின் படையுடன் மோதவிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com