அசத்தலாக பந்தைப் பிடித்த மேக்ஸ்வெல்
அசத்தலாக பந்தைப் பிடித்த மேக்ஸ்வெல்pt web

யாரு சாமி நீ? | எல்லைக்கோட்டை தாண்டிச் சென்ற பந்து.. அட்டகாசமாக காற்றில் பறந்து பிடித்த மேக்ஸ்வெல்!

Big Bash League தொடரில் பேட்ஸ்மேன் சிக்ஸருக்கு விளாசிய பந்தை எல்லைக்கோட்டின்மேல் பறந்து அட்டகாசமாக பிடித்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் வீரர் மேக்ஸ்வெல்..
Published on

2024 - 2025 Big Bash League கிரிக்கெட் தொடரின் 19 ஆவது லீக் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற்றது. இதில், பிரிஸ்பேன் ஹீட் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

 Big Bash League
Big Bash League

முதலில் களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் 7 விக்கெட்களை இழந்து 149 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக Max Bryant 77 ரன்களை எடுத்தார். சிறப்பாக பந்துவீசிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் Steketee 2 விக்கெட்களையும், சிடில், உசாமா மிர், டான் லாரன்ஸ், ஜோயல் பாரிஸ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

அசத்தலாக பந்தைப் பிடித்த மேக்ஸ்வெல்
அன்று சைரன் சத்தம் கேட்டாலே பயம்.. இப்போதோ ஆம்புலன்ஸ் ஓட்டுநர்.. நெகிழ வைக்கும் பெண்ணின் கதை!

அட்டகாச கேட்ச்

இடையே 16.1ஆவது ஓவரில், டான் லாரன்ஸ் வீசிய பந்தை Prestwidge தூக்கி அடித்தார். லாங் ஆனில் நின்று கொண்டிருந்த மேக்ஸ்வெல் பந்தை நோக்கி ஓடி எல்லையில் குதித்து பந்தினை அசத்தலாகப் பிடித்தார். இப்படி அடிக்கும் பந்துகள், பீல்டர்கள் எவ்வளவுதான் முயற்சித்தாலும் பெரும்பாலும் சிக்சர்களாகவே மாறும். ஆனால், மேக்ஸ்வெல் அட்டகாசமாக கேட்ச் பிடித்து பேட்ஸ்மேனுக்கு அதிர்ச்சி அளித்தார்.

பின்னர், 150 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் தொடக்கத்தில் விக்கெட்களை இழந்தாலும், டேனியல் லாரன்ஸ் மற்றும் ஸ்டோய்னிஸ் இணைந்து அணியை மீட்டனர். டேனியல் லாரன்ஸ் 64 ரன்களும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 62 ரன்களையும் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். 18.1 ஓவர்களில் மெல்போர்ன் அணி 5 விக்கெட்களை மட்டும் இழந்து 153 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

அசத்தலாக பந்தைப் பிடித்த மேக்ஸ்வெல்
கடைசி நேரத்தில் விலகிக் கொண்ட விடா முயற்சி.. பொங்கல் ரேஸில் மோதும் 4 திரைப்படங்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com