உலக கோப்பை  இந்திய அணி
உலக கோப்பை இந்திய அணிமுகநூல்

தொடங்கியது உலக கோப்பை இறுதிப்போட்டி.. இந்திய அணியின் பலம், பலவீனம் குறித்து ஒரு அலசல்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டியில் விளையாட உள்ள இந்திய அணியின் பலம், பலவீனம் குறித்து ஒரு அலசல்
Published on

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் அபார ஆட்டம் ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது.  ஆடிய 10 போட்டிகளிலும் வென்று நூற்றுக்கு நூறு வெற்றியை ஈட்டியுள்ளது இந்தியா. பேட்டிங்கில் ரோகித் சர்மா, கில், கோலி, ஸ்ரேயஸ், என டாப் 5 வீரர்களின் ஆட்டமும்
அபாரமாக இருக்கிறது.

ரோகித் சர்மா, கில், கோலி, ஸ்ரேயஸ்,
ரோகித் சர்மா, கில், கோலி, ஸ்ரேயஸ்,

இத்தொடரில் அதிக ரன் குவித்த முதல் 10 பேட்டர்களில் கோலி, ரோகித் சர்மா, ஸ்ரேயஸ் என 3 பேர் உள்ளனர். அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ள முதல் 4 பேட்டர்களில் வில்லியம்சன் தவிர மற்ற 3 பேரும் இந்தியர்கள். அதிக சிக்சர் அடித்ததில் ரோகித்
சர்மாவும் ஸ்ரேயஸ் ஐயரும்தான்  முதல் 2 இடங்களில் உள்ளனர். இந்த தொடரில் ஆல் அவுட் ஆகாத ஒரே அணி இந்தியா மட்டும்தான்.

இந்த புள்ளிவிவரங்களே இந்திய பேட்டர்களின் ஆதிக்கத்திற்கு அடையாளமாக உள்ளன. வழக்கமாக இந்தியாவின் வெற்றிகளில்
பேட்டர்களின் பங்களிப்பே பிரதானமாக இருக்கும் நிலையில் இந்த முறை பந்துவீச்சாளர்களும் பளிச்சிட்டு வெற்றிகளை குவிக்க உதவினர்.


இந்த தொடரில் எதிரணிகளை 2 முறை 100 ரன்களுக்கு கீழும் ஒரு முறை 150 ரன்னுக்கும் கீழும் சுருட்டி மிரட்டியுள்ளது இந்திய பவுலிங் படை. குறிப்பாக முகமது ஷமியின் எழுச்சி இந்தியாவின் வெற்றிகளுக்கு அஸ்திவாரம் அமைத்தது.

உலக கோப்பை  இந்திய அணி
உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்திய அணி முதலில் பேட்டிங்!

ஆறே போட்டிகளில் 23 விக்கெட் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார் ஷமி.  ஜஸ்பிரித் பும்ரா  கச்சித பந்துவீச்சால் எதிரணி பேட்டர்களை கட்டிப்போடுகிறார். இத்தொடரில் ஒரு ஓவருக்கு சராசரியாக 3.98 ரன்களை மட்டுமே விட்டுத்தந்து மிக சிக்கனமாக பந்துவீசியவர்களில் முதலிடத்தில் உள்ளார் பும்ரா.  சுழலுக்கு தடுமாறும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக குல்தீப்பும் ஜடேஜாவும் துருப்புச்சீட்டாக இருப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

எனினும் இந்திய அணிக்கு சில சிக்கல்களும் உள்ளன.  ஜடேஜாவை தவிர்த்து முழுமையான ஆல்ரவுண்டர்கள் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் குறை.  6ஆவது பந்துவீச்சாளர் இல்லாததை தலைமேல் தொங்கும் கத்தியை போல் பார்க்கவேண்டியுள்ளது.

உலக கோப்பை  இந்திய அணி
INDvAUS | "100 சதவீதம் இந்தியாதான் ஜெயிக்கும்" - World Cup Finals குறித்து ரசிகர்கள் கருத்து

பும்ரா, ஷமியை போல் சிராஜ் தொடர்ச்சியாக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தவில்லை.
சூர்யகுமார் யாதவ் தான் பேட் செய்த 6 போட்டிகளில் ஒன்றை தவிர மற்றவற்றில் சொல்லிக்கொள்ளும்படி ஆடவில்லை. எனவே சிராஜ் அல்லது சூர்யகுமார் இருவரில் ஒருவருக்கு பதிலாக சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் சேர்க்கப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சிலபல குறைகள் இருப்பினும் கேப்டன் ரோகித் சர்மா தனது துல்லியமான பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் வியூகங்கள் மூலம் இந்தியா 3ஆவது முறையாக கோப்பை வெல்ல உதவுவார் என எதிர்பார்க்கலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com