80 ரன்னில் ’இலங்கை’ AllOut.. ஜிம்பாப்வே வரலாற்று வெற்றி!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 80 ரன்களுக்கு சுருண்டு இலங்கை பரிதாபம்.
ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி இரண்டு ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் வெற்றியின் அருகாமையில் இருந்த ஜிம்பாப்வே அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இரண்டாவது போட்டியில் கம்பேக் கொடுத்த இலங்கை, ஜிம்பாப்வேவை எளிதாக வீழ்த்தி தொடரை 2-0 என கைப்பற்றியது.
இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றுவருகிறது. முதல் டி20 போட்டியில் இலங்கை வெற்றிபெற்ற நிலையில், 2வது போட்டியில் இலங்கை-ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
80 ரன்னில் சுருண்ட இலங்கை..
பரபரப்பாக தொடங்கிய 2வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, ஜிம்பாப்வேவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 17.4 ஓவரிலேயே 80 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. அதிகபட்சமாக கமில் மிஷாரா 20 ரன்கள் அடித்தார்.
அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா 4 ஓவரில் 11 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இலங்கை அணியின் மிக மோசமான ஸ்கோர் இதுவாகும்.
அதனைத்தொடர்ந்து விளையாடிவரும் ஜிம்பாப்வே அணி 11.2 ஓவரில் 61 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றிக்காக போராடி வருகிறது. இலங்கை அணியில் துஷ்மந்தா சமீரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கைக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.
ஆனால் மறுமுனையில் கடைசிவரை நிலைத்துநின்று 2 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் அடித்த ரியான் பர்ல், 7வது வீரராக களத்திற்கு வந்து 3 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் அடித்த டஸிங்கா இருவரும் ஜிம்பாப்வேவின் வெற்றியை உறுதிசெய்தனர்.
3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமன் செய்யப்பட்டுள்ளது.