\
rcb vs srh
rcb vs srhcricinfo

RCB பவுலிங்கை பந்தாடிய SRH.. 255 ரன்கள் குவித்து மிரட்டல்! டாப் 2 இடம் காலி?

ஆர்சிபிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் 255 ரன்கள் குவித்து மிரட்டியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
Published on
Summary

புள்ளிப்பட்டியலில் பரமபத ஆட்டம் போல் நீளும் 2026 ஐபிஎல் தொடரில், ஆர்சிபி, குஜராத், ஹைதராபாத் அணிகள் ஏற்கனவே பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. டாப் 2 இடத்துக்காக ஆர்சிபி, எஸ்ஆர்ஹெச் மோதும் நிலையில், ஹைதராபாத் 255 ரன்கள் குவித்து அழுத்தம் கொடுத்துள்ளது. ஆர்சிபி வெற்றி அல்லது குறைந்த வித்தியாசத் தோல்வி மட்டுமே அவர்களை டாப் 2-ல் நிலைநிறுத்தும்.

2026 ஐபிஎல் தொடரானது புள்ளிப்பட்டியலில் ஒரு பரமபத ஆட்டத்தையே கண்டுவருகிறது. டாப் 4 பட்டியலில் யார் இடம்பெற போகிறார்கள் என்ற குளறுபடியானது கடைசிவரை திகில் கிளப்பிய நிலையில், ஆர்சிபி, குஜராத் மற்றும் ஹைதராபாத் முதலிய 3 அணிகளும் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளன.

ஆர்சிபி, 2026
ஆர்சிபி, 2026

மீதமிருக்கும் 1 இடத்திற்காக பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கேகேஆர் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நிலவிவருகிறது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி டாப் 2-ல் இடம்பிடிக்கும் என்பதால் ஆர்சிபி மற்றும் ஹைத்ரான் அணிகளின் போட்டி சுவராசியமாக தொடங்கியுள்ளது.

rcb vs srh
ரோகித், கோலிக்கு பயம் காட்டிய இளம் ஸ்பின்னர்.. இந்திய அணியில் இடம்.. யார் இந்த மானவ் சுதார்!

பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி ஆர்சிபி அணியின் பந்துவீச்சை சூறையாடியது. 20 ஓவரில் 21 பவுண்டரிகள் 16 சிக்சர்களை பறக்கவிட்ட அவ்வணி 255 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 79 ரன்கள் விளாசினார்.

256 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆர்சிபி விளையாடிவருகிறது. ஒன்று இப்போட்டியில் ஆர்சிபி வெல்லவேண்டும் அல்லது நல்ல ரன்ரேட்டில் இருக்கும் ஆர்சிபி மிகக்குறைவான ரன்கள் வித்தியாசத்தில் தோற்கவேண்டும். அப்படி இல்லையென்றால் SRH டாப் 2-க்கும் இடம்பிடித்து ஆர்சிபி 3ஆம் இடத்திற்கு தள்ளப்படும்.

rcb vs srh
டாப் 2-வில் இடம்பெறுவதற்கான போட்டி.. ஆர்சிபியை சமாளிக்குமா SRH!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com