SRH fan black magic video against CSK goes viral
SRH fan black magicweb

SRH ரசிகரின் மாந்திரீகத்தால் CSK தோற்றதா..? இணையத்தில் வலம்வரும் வீடியோ!

நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 10 ரன்களில் சிஎஸ்கே தோற்றது. ஷிவம் துபேவின் விக்கெட் SRH அணியின் வெற்றியை உறுதிசெய்த நிலையில், வீடியோ ஒன்று இணையத்தில் வலம்வருகிறது.
Published on
Summary

2026 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி சரியான பிளேயிங் 11-ஐ கண்டுபிடித்து இரண்டு வெற்றிகள் பெற்றிருந்தாலும், எஸ்ஆர்எச் அணிக்கு எதிராக மீண்டும் பல மாற்றங்கள் செய்து தோல்வியை சந்தித்தது. கடைசி 10 ஓவரில் ரன்கள் குறைந்ததால், ஷிவம் துபே விக்கெட்டை இழந்த தருணம் முக்கியமாக அமைந்தது. இதேசமயம், எஸ்ஆர்எச் ரசிகர் ஒருவர் எலுமிச்சை பழத்துடன் மந்திரம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

2026 ஐபிஎல் தொடரில் வரிசையாக 3 போட்டிகளில் தோற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சரியான பிளேயிங் 11-ஐ கண்டுபிடித்த பிறகு தொடர்ச்சியாக 2 வெற்றிகளை பெற்று அசத்தியது. ஆனால் நேற்று நடைபெற்ற SRH-க்கு எதிரான போட்டியில் மீண்டும் அணியில் பல மாற்றங்களை செய்த சிஎஸ்கே அணி, மீண்டும் ஒரு தோல்வியை தழுவியது.

முதல் 10 ஓவரில் 111 ரன்களை குவித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடைசி 10 ஓவரில் 84 ரன்களை அடிக்க முடியாமல் தோல்வியை தழுவியது. இப்போட்டியில் கடைசி 4 ஓவரில் 46 ரன்கள் தேவையாக இருந்தபோது களத்தில் இருந்த ஷிவம் துபே மீது அனைவருக்கும் நம்பிக்கை இருந்தது. ஆனால் அவருடைய விக்கெட்டை வீழ்த்திய ஈஷன் மலிங்கா சிஎஸ்கே அணியிடமிருந்து வெற்றியை தட்டிப்பறித்தார்.

இந்தசூழலில் நேற்றைய போட்டியின் முடிவுக்கு பிறகு வீடியோ ஒன்று இணையத்தில் வலம்வருகிறது. அதில், SRH ரசிகர் ஒருவர் ஷிவம் துபே பேட்டிங் செய்யும்போது, அவுட்டாக வேண்டும் என எலுமிச்சை பழத்தை கையில் வைத்துகொண்டு முணுமுணுக்க அடுத்த சில நிமிடங்களில் ஷிவம் துபே அவுட்டாகி வெளியேறினார். இந்தவீடியோ இணையத்தில் வைரலாக, ரசிகர்கள் நகைச்சுவையாக பகிருந்து வருகின்றனர்.

6 போட்டிகளில் 4 போட்டியில் தோற்றிருக்கும் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் நீடிக்கிறது.

SRH fan black magic video against CSK goes viral
IPL தொடரிலிருந்து விலகும் ஆயுஸ் மாத்ரே.. பேட்டிங் கோச் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com