"ஜெய் ஸ்ரீ ராம்"! ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு வாழ்த்து பகிர்ந்த SA வீரர் கேசவ் மஹாராஜ்!

அயோத்தியில் நாளை ராமர் கோவில் திறப்பு விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், அனைவருக்கும் தன்னுடைய வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார் தென்னாப்பிரிக்க வீரர் கேசவ் மஹாராஜ்.
கேசவ் மஹாராஜ்
கேசவ் மஹாராஜ்web

இந்து மதத்தை கடைபிடித்துவரும் தென்னாப்பிரிக்க வீரர் கேசவ் மஹாராஜ், எப்போது பேட்டிங் செய்ய மைதானத்திற்குள் களமிறங்கினாலும் “ராம் சியா ராம்” என்ற பாடலை பின்னணியில் அரங்கிலிருப்போர் ஒலிக்கவிட்டுவருவது வழக்கம்.

இந்தியா தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் கூட கேசவ் மஹாராஜ் களமிறங்கும் போது “ராம் சியா ராம்” என்ற பாடல் ஒலி பரப்பப்பட்டது. அப்போது விக்கெட் கீப்பராக இருந்த இந்திய கேப்டன் கேஎல் ராகுல், “கேசவ் பையா, நீங்கள் எப்போது களமிறங்கினாலும் ராம் சியா ராம் பாடல் ஒலிக்கப்படுமா?” என்று கேட்க, அதற்கு கேசவ் மஹாராஜ் “ஆமாம்” என பதில் கூறிய வீடியோ சிறிது நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டது.

Keshav Maharaj
Keshav Maharaj

அதேபோல இந்தியா தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான டெஸ்ட்போட்டியில் கூட, கேசவ் மஹாராஜ் களமிறங்கும் போது “ராம் சியா ராம்” என்ற பாடல் ஒலிக்கப்பட்டது. அப்போது கேசவ் மஹாராஜ் வருகையை சைகை மூலம் பதிவுசெய்த விராட் கோலி, ஸ்ரீ ராமரை போல் வில்லேந்தி அம்பு விடுவதை போல் சைகை செய்து மஹாராஜை வரவேற்றார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.

கேசவ் மஹாராஜ்
ஸ்ரீ ராமரை போல் போஸ் கொடுத்த விராட் கோலி! களத்தில் ஒலித்த “ராம் சியா ராம்” பாடல்! #ViralVideo
virat kohli
virat kohli

இந்நிலையில் தான் தற்போது ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு கேசவ் மஹாராஜ் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

“அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஆன்மிக அறிவொளி பரவட்டும்!”

கேசவ் மஹாராஜ் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “அனைவருக்கும் வணக்கம், நாளை அயோத்தியில் நடைபெறவிருக்கும் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு தென்னாப்பிரிக்காவில் இருக்கும் அனைத்து இந்திய மக்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அனைவருக்கும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஆன்மிக அறிவொளி என அனைத்தும் கிடைக்கட்டும். ஜெய் ஸ்ரீ ராம்!” என பேசி வாழ்த்தை பகிர்ந்துள்ளார்.

ராம் சியா ராம் பாடல் ஒலிபரப்படுவது குறித்து முன்னர் பேசியிருந்த கேசவ், “வெளிப்படையாக, நான் மைதானத்திலிருக்கும் மீடியோ பெண்மணியிடம் சென்று “ராம் சியா ராம்” பாடலை இசைக்குமாறு கேட்டுக் கொண்டேன். என்னைப் பொறுத்தவரை, கடவுள் எனக்கு மிகப்பெரிய ஆசிர்வாதம், வழிகாட்டுதல் மற்றும் வாய்ப்பு என அனைத்தையும் வழங்கியுள்ளார். அதற்கு நன்றியாக இருக்கும் விதமாகவே அந்தப்பாடலை நான் இசைக்குமாறு கூறினேன். “ராம் சியா ராம்” பாடலை பின்னணியில் ஒலிக்கவிட்டு நடந்துவருவது ஒரு இனிமையான உணர்வு” என்று பிடிஐ உடன் பேசியிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com