ஸ்ரீ ராமரை போல் போஸ் கொடுத்த விராட் கோலி! களத்தில் ஒலித்த “ராம் சியா ராம்” பாடல்! #ViralVideo

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஸ்ரீ ராமரை போல் விராட் கோலி வில்லேந்தி போஸ் கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
virat kohli shree ram pose
virat kohli shree ram poseX

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் டீன் எல்கரின் 185 ரன்கள், ரபாடாவின் 5 விக்கெட்டுகள் என்ற தரமான தாக்குதலால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து.

இந்நிலையில் இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்செய்ய வேண்டிய கட்டாயத்தில் இன்று களமிறங்கியது இந்திய அணி. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவை பந்துவீசுமாறு அழைத்தது. முதல் டெஸ்ட் போட்டியில் 131 ரன்களுக்கே ஆல் அவுட்டான இந்திய அணி, இந்த போட்டியில் வாங்கிய அடியை திருப்பிக்கொடுக்கும் வகையில் பந்துவீசியது.

பந்துவீச்சில் மிரட்டிய முகமது சிராஜ்!

புதிய பந்தில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது சிராஜ், டாப் ஆர்டர் வீரர்களான மார்க்ரம், எல்கர், டோனி டே மூன்று வீரர்களையும் ஓரிலக்க ரன்களில் வெளியேற்றி விக்கெட் வேட்டை நடத்தினார். 11 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்கா தடுமாற, தன் பங்கிற்கு தானும் 2 விக்கெட்டை எடுத்துவந்த ஜஸ்பிரித் பும்ரா கலக்கி போட்டார்.

siraj
siraj

தொடர்ந்து அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது சிராஜ், 9 ஓவர்கள் மட்டுமே வீசி 15 ரன்னை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா மண்ணில் தன்னுடைய சிறந்த பவுலிங்கை பதிவுசெய்தார். 55 ரன்னுக்கே அனைத்து விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்கா அணி சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

siraj
siraj

இந்நிலையில்தான் தென்னாப்பிரிக்கா அணி 34 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இருந்தபோது விராட் கோலி செய்த செய்கை வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

virat kohli shree ram pose
பழிக்குப்பழி தீர்த்த இந்தியா: சீறிய சிராஜ்.. 55 ரன்களுக்குள் சுருண்ட தென்னாப்பிரிக்கா!

ஸ்ரீராமரை போல் போஸ் கொடுத்த விராட் கோலி!

இந்திய வம்சாவளியான கேசவ் மஹாராஜ் இந்த தொடர் முழுவதும் களமிறங்கும் போதெல்லாம் “ராம் சியா ராம்” பாடல் மைதானத்தில் ஒலிபரப்பப்படுகிறது. முந்தைய போட்டியில் “நீங்கள் பேட்டிங் செய்ய இறங்கும் போதெல்லாம் ராம் பாடல் ஒலிக்கிறதே” என கேஎல் ராகுல் கேட்க, அதற்கு ”ஆமாம்” என மஹாராஜ் சொன்ன வீடியோ வைரலானது.

இந்நிலையில்தான் இன்று தென்னாப்பிரிக்கா அணி 34 ரன்களுக்கு 6வது விக்கெட்டை இழந்த போது, 7வது விக்கெட்டுக்கு களமிறங்க தென்னாப்பிரிக்க வீரர் கேசவ் மஹாராஜ் தயாராக இருந்தார். அப்போது அவர் களமிறங்குவதற்கு முன்பாக விராட் கோலி தனது கைகளை கூப்பி வணங்கி, வில்லில் நாண் ஏற்றி ஸ்ரீ ராமர் நிற்பது போல் போஸ் கொடுக்க, களத்தில் ‘ராம் சியா ராம்’ பாடல் ஒலிக்கத்தொடங்கியது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com