\
இலங்கையை வீழ்த்திய சிராஜ்
இலங்கையை வீழ்த்திய சிராஜ்siraj smashed hattrick sixes against sri lanka

’இலங்கைக்கு மீண்டும் வில்லனான சிராஜ்..’ ஹாட்ரிக் சிக்சர்கள் அடித்து மிரட்டல்! இந்தியா வெற்றி!

இலங்கைக்கு எதிரான பயிற்சி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முகமது சிராஜின் கடைசி நேர அதிரடி பேட்டிங்கால் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
Published on
Summary

இலங்கை கிரிக்கெட் 11 அணிக்கு எதிரான 3 நாள் பயிற்சி டெஸ்டில், தேவ்தத் படிக்கல் சதம், இரு அணிகளின் டிக்ளரேஷன் என பரபரப்பாக நீண்ட போட்டி, கடைசி எட்டு பந்துகளில் 27 ரன்கள் தேவை என்ற சூழலில் உச்சக்கட்டத்தை எட்டியது. எப்போதும் பந்துவீச்சால் இலங்கையை திணறவைக்கும் முகமது சிராஜ், இந்த முறை ஹாட்ரிக் சிக்சர்கள் உள்பட 15 பந்தில் 32 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு அதிரடி வெற்றியை 선물ித்தார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. தொடருக்கு முன்னதாக இலங்கை கிரிக்கெட் 11 அணியுடனான 3 நாட்கள் கொண்ட பயிற்சி டெஸ்ட் போட்டியில் இந்தியா விளையாடியது.

பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 363 ரன்கள் குவித்து டிக்ளார் செய்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணியில் சிறந்த ஃபார்மில் இருக்கும் தேவ்தத் படிக்கல் அபாரமான சதமடித்து 142 ரன்கள் குவிக்க, 356/6 ரன்கள் அடித்து இந்தியா டிக்ளார் செய்தது.

தொடர்ந்து 2வது இன்னிங்ஸில் விளையாடிய இலங்கை அணி 200/6 ரன்கள் குவித்து டிக்ளார் செய்தது. 206 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய இந்திய அணியில் அனைத்து வீரர்களும் அதிரடியாகவே விளையாடினர். போட்டியின் கடைசி நாளான இன்று இறுதி 8 பந்துகளுக்கு 27 ரன்கள் அடித்தால் இந்தியா வெற்றிபெறும் என்ற நிலை இருந்தது. எப்படியும் போட்டி சமனில் முடியும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் ஹாட்ரிக் சிக்சர்களை பறக்கவிட்ட முகமது சிராஜ் 4 சிக்சர்கள், 1 பவுண்டரி உடன் 15 பந்தில் 32 ரன்கள் விளாசி இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். எப்போதும் இலங்கைக்கு எதிராக பந்துவீச்சில் மிரட்டும் முகமது சிராஜ், இந்தமுறை பேட்டிங்கில் வில்லனாக மாறினார். போட்டி முடிந்தபிறகு இலங்கை வீரர்கள் சிராஜ் சிக்சர் அடித்த பேட்டை ஆச்சரியத்துடன் வாங்கிப்பார்த்தனர்.

இலங்கையை வீழ்த்திய சிராஜ்
பாண்டியாவுக்கு பதில் மாத்ரே, துபே OUT? CSK-ன் 2 பதிவால் ரசிகர்கள் ஷாக்! உறுதியானதா CSK-MI Trade?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com