\
mhatre - hardik - dube
mhatre - hardik - dubecsk vs mi trade

பாண்டியாவுக்கு பதில் மாத்ரே, துபே OUT? CSK-ன் 2 பதிவால் ரசிகர்கள் ஷாக்! உறுதியானதா CSK-MI Trade?

ஹர்திக் பாண்டியா மற்றும் சிஎஸ்கே இடையேயான யூகங்களுக்கு மத்தியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்தடுத்த பதிவுகள் கவனம் பெறுகின்றன.
Published on
Summary

2027 ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக ஹர்திக் பாண்டியா டிரேட் செய்யப்படவிருக்கிறார் என்ற தகவல்தான் சமீபநாட்களாகவே பேசுபொருளாக இருந்துவருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக சொல்லப்படுகிறது. இந்தசூழலில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமீபத்திய எக்ஸ் தள பதிவுகள் ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளன. என்ன விவரம் விரிவாக பார்க்கலாம்..

2026 ஐபிஎல்லை பொறுத்தவரை அதிக கோப்பை வென்ற அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 3 அணிகளும் பிளேஆஃப் சுற்றுக்கு கூட முன்னேறவில்லை. 13 கோப்பை வென்ற அணிகள் 9வது, 8வது மற்றும் 7வது இடங்களில் மட்டுமே முடித்தன. இந்த 3 அணிகளை பொறுத்தவரையில் நல்ல வீரர்கள் இருந்தபோதும் சரியான பிளேயிங் 11-ஐ செட் முடியாமல் தடுமாறி வருகின்றன. 3 அணிகளிலும் வெளிப்படையான பல குறைபாடுகள் இருப்பதால் அதை களையும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாக தெரிகிறது.

சிஎஸ்கே, 2026
சிஎஸ்கே, 2026csk

மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர்ச்சியான மோசமான செயல்பாடுகளுக்கு ஹர்திக் பாண்டியா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் நிலையில், அவர் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்காரணமாக ஹர்திக் பாண்டியாவை வர்த்தகம் மூலம் வெளியேற்ற முயற்சி எடுத்திருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக சொல்லப்படுகிறது.

Hardik Pandya to join kkr ipl 2027 trade
ஹர்திக் பாண்டியாஎக்ஸ் தளம்

சிஎஸ்கேவுடனான பேச்சுவார்த்தையில் ஹர்திக் பாண்டியாவிற்கு பதில் ஷிவம் துபே, கலீல் அகமது மற்றும் அன்ஷூல் கம்போஜ் முதலிய 3 வீரர்களை மும்பை அணி கேட்டதாக சொல்லப்படுகிறது. 2 மெயின் பவுலர்களையும் விட்டுக்கொடுக்க சிஎஸ்கே விரும்பவில்லை என தெரிகிறது. அதனால் ஆயுஷ் மாத்ரே, ஷிவம் துபே மற்றும் ஜேமி ஓவர்டனை மும்பை கேட்டதாக சொல்லப்படுகிறது.

mhatre - hardik - dube
லாரா, ரிச்சர்ட்ஸ் கட்டெழுப்பிய கோட்டை.. 3வது முறையாக உலகக்கோப்பை தகுதியை இழந்த WI!

சிஎஸ்கே அதிர்ச்சி பதிவுகள்..

இந்தசூழலில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்தடுத்த எக்ஸ் தள பதிவுகள் சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளன. சிஎஸ்கேவின் ஒரு பதிவில் ஷிவம் துபேவிற்காக ‘எப்போதும் மஞ்சள்’ என்று பதிவிடப்பட்டுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் ஜடேவிற்கான டிரேட் பேச்சு இருந்தபோதும் இதேபோலதான் பதிவிடப்பட்டது என்றும், ஷிவம் துபே வெளியேறுவது உறுதிதான் என்றும் கருத்திட்டு வருகின்றனர்.

மற்றொரு பதிவில் ஜேமி ஓவர்டன் குறித்து பதிவிடப்பட்டுள்ளது. அதில் ஜேமி ஓவர்டனை விட்டுக்கொடுக்க முடியாது என்பது போல சொல்லப்பட்டுள்ளது. கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட்ட ஓவர்டனை வெளியேற்ற வேண்டாம் என்று சென்னை ரசிகர்கள் கோரிக்கையை வைத்து வருகின்றனர்.

சிஎஸ்கேவின் மேலுமொரு பதிவில் கிரிக்கெட் மைதானம் மஞ்சள் மற்றூம் நீலம் நிறத்தில் இருப்பது போல பதிவிடப்பட்டுள்ளது. இது சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான டிரேட் உறுதிசெய்யப்பட்டதை குறிக்கிறதா? அல்லது பேச்சுவார்த்தை நடந்துவருவதை குறிக்கிறதா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

18 ஆண்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் வீரர் மற்றும் பயிற்சியாளராக பயணித்த ஸ்டீபன் பிளெமிங், தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியிருக்கும் நிலையில், அணியில் இருக்கும் பிரச்னைகளை களையும் நடவடிக்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஈடுபட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு வீரர் சிஎஸ்கேவிற்கு வந்தால் அது பலவகையில் சாதகமானதை சேர்க்கும் என்பதால் இந்த டிரேட் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை இரண்டு அணிகளும் இன்னும் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

mhatre - hardik - dube
அவருக்கு 15 வயது தானா..?? எங்களுக்கு இன்னும் சந்தேகம் உள்ளது! சூர்யவன்ஷி வயது குறித்து பிரட் லீ!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com