Shubman Gill Trolled Brutally For Removing Sanju Samson from T20 WC Photo
india teaminsta

T20 WC PHOTO | சஞ்சு சாம்சன் நீக்கம்.. எடிட் செய்து வெளியீடா? சர்ச்சையில் ஷுப்மன் கில்!

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் போட்டோ எடிட் செய்து பகிர்ந்ததாக இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் சுப்மன் கில் சர்ச்சையை எதிர்கொண்டுள்ளார்.
Published on

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் போட்டோ எடிட் செய்து பகிர்ந்ததாக இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் சுப்மன் கில் சர்ச்சையை எதிர்கொண்டுள்ளார்.

2026 டி20 உலகக்கோப்பையின் இறுகிப்போட்டியில் 255 ரன்கள் குளித்த இந்திய அணி, நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பை வென்று சாதனை படைத்தது. அதன்மூலம் 3 முறை டி20 உலகக்கோப்பை வென்ற முதல் அணி, ஹோம் கிரவுண்டில் டி.20 உலகக்கோப்பை வென்ற முதல் அணி அடுத்தடுத்து தொடர்ச்சியாக 2 கோப்பை வென்ற முதல் அணி என 3 உலக சாதனைகளை படைத்து அசத்தியது இந்த வெற்றிக்குப் பின்னால் இந்திய அணியின் ஓட்டுமொத்த உழைப்பும் இருக்கிறது. அபிஷேக், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், பும்ரா, வருண் சக்கரவர்த்தி, ஹர்திக் பாண்டியா, நிலக் வர்மா என தொடர் முழுவதும் ஒவ்வொருவரும் தங்களது திறமையை நிரூபித்தனர். ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு மேட்ச் வின்னர்கள் உருவாகினர். அதன் பயனே இந்திய அணி கோப்பையை கையில் ஏந்தியது இதனால், இந்திய அணியைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் போட்டோ எடிட் செய்து பகிர்ந்ததாக இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் சுப்மன் கில் சர்ச்சையை எதிர்கொண்டுள்ளார். இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த அவர், கேப்டன் சூர்யகுமார் யாதவ், சக வீரர்களுடன் கோப்பையை உயர்த்திப் பிடிக்கும் அந்த போட்டோவை கில் தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார் ஆனால் அந்த போட்டோவில் சஞ்சு சாம்சன் முகம் தெரியப்படவில்லை, இதையடுத்து அவர் வேண்டுமென்றே, சஞ்சு சாம்சனின் புகைப்படத்தை மட்டும் நீக்கிவிட்டு வாழ்த்துப் பதிவிட்டிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

Shubman Gill Trolled Brutally For Removing Sanju Samson from T20 WC Photo
ICC தரவரிசை | வெறும் 4 புள்ளிதான்.. அபிஷேக்குடன் போட்டியிடும் இஷான்.. கீழிறங்கிய வருண்!

மேலும், 'ஓர் இந்திய அணியின் கேப்டனே இவ்வாறு செய்யலாமா' எனப் பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர். இன்னும் சிவரோ அது தெரியாமல் நடந்திருக்கலாம் என்றும் கருத்துத் தெரிவித்தனர், மேலும், வெவ்வேறு கோணங்களில் புகைப்படங்கள் எடுத்திருப்பதால், சஞ்சு சாம்சன் பின்னால் மறைந்திருப்பதுபோல தெரியும் என்றும் கருத்து தெரிவித்திருந்தனர். எனினும், இவ்விவகாரத்தில் ஷுப்மன் கில் கருத்து தெரிவித்தாலே உண்மை வெளியே வரும். இது ஒருபுறமிருக்க மறுபுறம் சூர்யகுமார் யாதவ் வெளியிட்ட அதேபோன்ற புகைப்படத்தில், ஜஸ்பிரித் பும்ராவின் பின்னால் சாம்சன் ஓரளவு நிற்பது தெரியும்.

நியூசிலாந்து தொடருக்கு முன்னதாக டி20 போட்டிகளில் விளையாடி வந்த துணை கேப்டன் ஷுப்மன் கில் டி20 உலகக் கோப்பை அணி மற்றும் நியூசிலாந்து தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டார் தொடக்க ஆட்டக்காரராக கில்லுக்குப் பதிலாக சஞ்சுசாம்சன் சேர்க்கப்பட்டதாலேயே அவர் விரக்தியில் சஞ்சுவின் புகைப்படத்தை நீக்கியிருக்கலாம் என்றும் அவருக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. உலகக் கோப்பை அணி அறிவிக்கப்பட்டபோது ஐந்து தேர்வாளர்களில் மூன்று பேர் கில்லைச் சேர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. காரணம், அதற்கு முன்பு நடைபெற்ற போட்டிகளில் அவர் ஃபார்மின்றி தவித்தார் அதேநேரத்தில் உலகக்கோப்பையின் சூப்பர் | சுற்றிலிருந்து கம்பேக் கொடுத்த சஞ்சு சாம்சன், தொடர்ந்து மூன்று அரைசதங்கள் அடித்துட இந்தியா கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார் தொடர் நாயகன் விருதையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Shubman Gill Trolled Brutally For Removing Sanju Samson from T20 WC Photo
வெற்றிக் கொண்டாட்டம் | தேசியக் கொடியுடன் படுத்த ஹர்திக் பாண்டியா? புனே வழக்கறிஞர் புகார்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com