\
shubman gill
shubman gillweb

15 இன்னிங்ஸில் 6 டெஸ்ட் சதங்கள்.. சச்சின் சாதனையை நெருங்கும் கில்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் மற்றும் இந்திய கேப்டன் சுப்மன் கில் இருவரும் சதமடித்து அசத்தினர்.
Published on
Summary

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் இந்தியா முதல் நாளே 368/3 என ரன்குவியலில் முன்னிலை பெற்றது. ஜெய்ஸ்வால், ராகுல் தொடக்கத்தில் அதிர்ச்சியளித்தாலும், ராகுல் அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி சதமடித்தார். பின்னர் சாய் சுதர்சன் 83 ரன்களும், கேப்டனாக விளையாடும் சுப்மன் கில் 15 இன்னிங்ஸில் 6வது டெஸ்ட் சதமையும் பதிவு செய்து சச்சின் சாதனையை நெருங்கினார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆப்கானிஸ்தான் அணி 1 டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. சுப்மன் கில் தலைமையிலான ஒருநாள் அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா இருவரும் இடம்பெற்றுள்ளனர். அதேபோல இஷான் கிஷன் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார்.

manav suthar
manav suthar

டெஸ்ட் அணியை பொறுத்தவரையில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மனவ் சுதர், குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே போன்ற வீரர்கள் டெஸ்ட் அணியில் இடம்பெற்ற நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் மனவ் சுதர் டெஸ்ட் அணியின் அறிமுகத்தை பெற்றுள்ளார். குல்தீப் யாதவ் அவருக்கு இந்திய டெஸ்ட் அணிக்கான கேப்பை ஒப்படைத்தார்.

shubman gill
சிறந்த டெஸ்ட் வீரர் யார்? ’சச்சின், கோலி இல்லை..’ தென்னாப்ரிக்கா ஜாம்பவான் பதில்!

கேப்டனாக 6வது சதமடித்த சுப்மன் கில்..

நியூ சண்டிகரில் தொடங்கப்பட்ட போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. டாப் ஆர்டர் வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் நிதானமாகவே தொடங்கினார்கள். இரண்டு பேரும் விக்கெட் விழுவதற்கான வாய்ப்புகளை வழங்கியபோதும், ஆப்கானிஸ்தான் கேப்டனும் வீரர்களும் அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை. கேஎல் ராகுல் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பரிடம் சென்ற பந்தை ரிவ்யூ கேட்க ஆப்கானிஸ்தான் கேப்டன் தவறவிட்டார். அதைப்பயன்படுத்திக்கொண்ட ராகுல் சதமடித்து அசத்தினார்.

KL Rahul
KL Rahul

ஜெய்ஸ்வால் 24 ரன்னிலும், ராகுல் 100 ரன்னிலும் அவுட்டாக அடுத்து களத்திற்கு வந்த சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சதமடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட சாய் சுதர்சன் 83 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கேப்டன் சுப்மன் கில் தன்னுடைய 11வது டெஸ்ட் சதத்தையும், கேப்டனாக 15 இன்னிங்ஸ்களில் 6வது டெஸ்ட் சதத்தையும் பதிவுசெய்து அசத்தினார்.

shubman gill
shubman gill

அடுத்துவந்த ரிஷப் பண்ட்டும் அதிரடியாக விளையாடி அரைசதமடிக்க முதல் நாள் முடிவில் 368/3 ரன்கள் சேர்த்தது இந்திய அணி.

கேப்டனாக 6 சதங்களை அடித்திருக்கும் கில், சச்சினின் 7 சதங்களை முறியடிக்கும் வாய்ப்பை நெருங்கியுள்ளார். சச்சின் 43 இன்னிங்ஸ்களில் 7 சதங்கள் அடித்திருந்த நிலையில், சுப்மன் கில் 15 இன்னிங்ஸ்களில் 6 சதங்களை அடித்து அசத்தியுள்ளார்.

shubman gill
’களத்துலேயே இறங்கல; அதுக்குள்ள..’ சச்சினின் 37 ஆண்டுகால சாதனையை தகர்த்த வைபவ் சூர்யவன்ஷி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com