\
dale steyn
dale steynweb

சிறந்த டெஸ்ட் வீரர் யார்? ’சச்சின், கோலி இல்லை..’ தென்னாப்ரிக்கா ஜாம்பவான் பதில்!

நீங்கள் எதிர்கொண்ட சிறந்த டெஸ்ட் வீரர் யார் என்ற கேள்விக்கு தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு ஜாம்பவான் டேல் ஸ்டெயின் பதிலளித்துள்ளார்.
Published on
Summary

டெஸ்ட் கிரிக்கெட்டின் மகத்துவத்தை விளக்கும் இந்த செய்தியில், தென்னாப்பிரிக்கா வேகப்பந்து ஜாம்பவான் டேல் ஸ்டெயின், தன் கரியரில் எதிர்கொண்ட சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் யார் என்ற கேள்விக்கு பதில் அளிக்கிறார். சச்சின், கோலி, லாரா போன்ற லெஜண்டுகளை விட, பல கட்ட ஒப்பீடுகளுக்குப் பிறகும் இங்கிலாந்து வீரரையே ‘ஃபியர் ஃபேக்டர்’ வீரராக தேர்வு செய்தது முக்கிய அம்சமாகிறது.

கிரிக்கெட் விளையாட்டின் ஆகச்சிறந்த வடிவமாக டெஸ்ட் கொண்டாடப்படுகிறது. ஒரு பேட்ஸ்மேன் மற்றும் பவுலரின் திறமையை பரிசோதிக்கும் வடிவம் என்பதாலேயே டெஸ்ட் வடிவம் கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படுகிறது. ஒரு வீரர் டெஸ்ட் கேப்பை வாங்கிவிட்டாலே அது பெருமைமிகு தருணமாக இருக்கும் நிலையில், ஒரு வீரர் சிறந்த டெஸ்ட் வீரராக அறியப்பட்டால் அதைவிட வேறென்ன இருக்கப்போகிறது.

இந்நிலையில் தான் பந்துவீசியதிலேயே சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் யார் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு ஜாம்பவான் டேல் ஸ்டெயின்.

dale steyn
20 வயதில் முதல் இந்தியராக வரலாறு.. பிரக்ஞானந்தா படைத்த மாபெரும் சாதனை!

சிறந்த டெஸ்ட் வீரர்களாக டான் பிராட்மேன், விவிஐ ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, சங்கக்கரா, டிராவிட், ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட், விராட் கோலி போன்ற வீரர்கள் அறியப்படும் நிலையில், டேல் ஸ்டெயின் பந்துவீசியபோது எதிர்கொண்ட சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் யார் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

கிறிக்இன்ஃபோ வெளியிட்டிருக்கும் வீடியோவில், சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், சந்தர்பால், கங்குலி, யூனிஸ்கானை புறக்கணித்து மைக்கேல் கிளார்க்கை தேர்வுசெய்தார். பின்னர் டேவிட் வார்னரை தேர்வுசெய்த அவர், சட்டீஸ்வர் புஜாரா, கிறிஸ் கெய்லை புறக்கணித்தார்.

பின்னர் டேவிட் வார்னரை புறக்கணித்து கெவின் பீட்டர்சனை தேர்ந்தெடுத்த அவர், விரேந்தர் சேவாக்கை கடினமாக ஒப்பீடு என்று குறிப்பிட்ட பிறகு பீட்டர்சனை தேர்வுசெய்தார். தொடர்ந்து அலஸ்டர் குக், ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி போன்ற வீரர்களை தவிர்த்த அவர் பீட்டர்சனையே தேர்ந்தெடுத்தார்.

இறுதியில் கடினமான ஒப்பீடாக பிரையன் லாரா, சச்சின் டெண்டுல்கரின் பெயர்கள் சொல்லப்பட்டன. ஆனால் அப்போதும் அவர் கெவின் பீட்டர்சனையே தேர்வுசெய்தார், அவருடைய பந்துவீச்சு கரியரில் ஃபியர் ஃபேக்டர் வீரராக பீட்டர்சனை குறிப்பிட்டார்.

dale steyn
15 வருடத்திற்கு பின் முதல்முறை.. ஆப்கானிஸ்தான்-இந்தியா டெஸ்ட் போட்டியில் நடந்த சம்பவம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com