ENG ஜாம்பவானையே திணறடித்த பஷீர்.. வீடியோவை பார்த்து மிரண்ட ஸ்டோக்ஸ்! 2வது Test-ன் துருப்புச்சீட்டு!

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வலதுகை ஆஃப் ஸ்பின்னரான சோயப் பஷீர் என்ற 20 வயது வீரர் சேர்க்கப்பட்டுள்ளார்.
சோயப் பஷீர்
சோயப் பஷீர்web

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்ற நிலையில், தோல்விபெறக்கூடிய நிலையிலிருந்து தங்களுடைய “பாஸ்பால் அட்டாக்” மூலம் ஒரு வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இங்கிலாந்து அணி.

முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலை பெற்றபோதும் கூட இந்திய அணியால் வெற்றிபெறமுடியவில்லை. 100 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்ற இந்திய அணியை சொந்தமண்ணில் வீழ்த்திய முதல் சர்வதேச அணி என்ற சாதனையை இங்கிலாந்து அணி தன்வசமாக்கியுள்ளது.

இந்நிலையில், இரண்டு அணிகளும் மோதக்கூடிய இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (பிப்.2) விசாகப்பட்டினத்தில் நடக்கவுள்ளது. இரண்டவது போட்டிக்கான இங்கிலாந்து அணியில் 6 முதல்தர டெஸ்ட் போட்டிகளில் கூட விளையாடாத 20 வயதே ஆன இளம் ஆஃப் ஸ்பின்னரான சோயப் பஷீரை தேர்ந்தெடுத்துள்ளார் கேப்டன் பென் ஸ்டோக்ஸ்.

X வீடியோ ஒன்றில் பார்த்து மிரண்டு போன ஸ்டோக்ஸ்!

பாகிஸ்தான் வம்சாவளியான சோயப் பஷீர் இங்கிலாந்து அணிக்கான அறிமுகத்தை இன்னும் பெறவில்லை என்றாலும், இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான விமான பயணத்தின் போது விசா கிடைக்காமல் போனதால் பேசுபொருளாக மாறினார். வெறும் 6 முதல் தர போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கும் பஷீர் மீது இங்கிலாந்து அணி அதிகப்படியான நம்பிக்கையை வைத்துள்ளது. இவ்வளவு குறைவான போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்த போதிலும், இங்கிலாந்தின் ஜாம்பவான் பேட்ஸ்மேனான அலெஸ்டர் குக்கிற்கு எதிராக அவர் போட்ட ஒரு அபாரமான ஸ்பெல் தான் இங்கிலாந்துக்கான முதல் டெஸ்ட் அழைப்பை அவருக்கு பெற்றுத்தந்துள்ளது.

சோயப் பஷீர்
சோயப் பஷீர்

பஷீர் குறித்து பேசியிருக்கும் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், “சரியாகச் சொல்வதானால், அபுதாபியில் தான் நான் முதன்முதலாக பஷீரை நேரிலேயே பார்த்தேன். அதற்கு முன் நான் அவரை பார்த்தது ஒரு சமூக வலைதள வீடியோவில் தான். ட்விட்டரில் ஒரு வீடியோவொன்றில் கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் அலெஸ்டர் குக்கிற்கு எதிராக அவர் பவுலிங் போடும் காணொளியை பார்த்தேன்.

உடனடியாக நான் இங்கிலாந்து கிரிக்கெட்டின் இயக்குநர் ராபர் கீ மற்றும் ப்ரெண்ட்டன் மெக்கல்லம் இருவரும் இருக்கும் வாட்ஸ்அப் குழுவொன்றில் அவரின் வீடியோவை ஷேர் செய்தேன். இதைப்பாருங்கள், இவர் நமது இந்திய சுற்றுப்பயணத்தில் நாம் நினைத்ததை செய்யக்கூடிய ஒரு பவுலராக இருப்பார்” என்று கூறினேன். பின்னர் அந்த விசயம் அங்கிருந்து முன்னேறி தற்போது இந்தியாவிற்கு எதிரான டெஸ் தொடர் வரை வந்துள்ளது. எங்கள் பயிற்சியாளர்கள் எங்களுக்கு பக்கபலமாக செயல்பட்டுள்ளனர்” என்று 2வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ESPNcricinfo-விற்கு பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

சோயப் பஷீர்
”கோலி வந்துட்டா Win பண்ண முடியாது.. அதற்குள் ENG முந்திக்கொள்ள வேண்டும்!” - முன். இங்கிலாந்து வீரர்

நாங்கள் நினைத்த அனைத்தையும் பஷீர் செய்தார்!

பஷீர் ’எங்களுடைய அனைத்து கேள்விகளுக்குமான பதிலாக இருந்தார்’ என்று பென் ஸ்டோக்ஸ்கூறியுள்ளார்.

Shoaib Bashir
Shoaib Bashir

மேலும் பேசிய அவர், “அவருடைய அந்த வீடியோவில் நான் ஒன்றைப் பார்த்தேன். அவரின் உயரத்தை பயன்படுத்தி பேட்ஸ்மேனுக்கு எதிராக சிறந்த ஆக்சனை கொண்டிருந்தார். அவரால் பேட்டர்களை பீட் செய்யக்கூடிய பந்துகளை வீசமுடிந்தது. அதை நான் பார்த்தபிறகு இவர் இந்தியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் சிறந்த தேர்வாக இருப்பார் என்று நினைத்தேன். இந்தியாவில் நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளதால் அவரின் ஸ்பின் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அதுமட்டுமல்லால் அவர் எங்களிடம் இருந்த அனைத்து கேள்விக்குமான பதிலை அவருடைய பந்துவீச்சில் வைத்திருந்தார்” என பேசியுள்ளார்.

சோயப் பஷீர்
இன்டர்நெட் வசதி கூட இல்லாத கிராமம்! 21 வயதில் செக்யூரிட்டி வேலை! WI ஜாம்பவான்களை அழவைத்த ஷமர் ஜோசப்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com