மொயின் அலி தேர்ந்தெடுத்த டாப் 5 இந்திய வீரர்கள்! 3வது இடத்தில் சச்சின்! முதலிடத்தில் யார் தெரியுமா?

இங்கிலாந்து ஸ்பின்னர் மொயின் அலி எக்காலத்திற்கும் சிறந்த டாப் 5 இந்திய வீரர்களை வரிசை படுத்தியுள்ளார்.
யுவராஜ் - சச்சின் - கோலி
யுவராஜ் - சச்சின் - கோலிPT

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி தனது சிறந்த ஐந்து இந்திய கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்துள்ளார். 36 வயதான அவர், இங்கிலாந்து அணியின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக ஜொலித்தார். சமீபத்தில் ஓய்வை அறிவித்த மொயின் அலி இந்திய அணியின் சிறந்த 5 வீரர்களை வரிசை படுத்தியுள்ளார்.

சச்சினுக்கு 3வது இடம்! விராட் கோலிக்கு 2வது இடம்! முதல் இடம்?

சாம்ப் ஆர்மியுடன் ஒரு நேர்காணலில் பேசியிருக்கும் மொயின் அலி, எக்காலத்திற்கும் சிறந்த 5 இந்திய கிரிக்கெட் வீரர்களை வரிசைப்படுத்தினார். அந்த வீடியோவில் பேசியிருக்கும் அவர்,

yuvaraj
yuvaraj

நம்பர் 5: யுவராஜ் சிங்

சிறந்த பேட்டிங் ஃபார்மில் இருந்தால் அவருடைய பேட்டிங்கை மட்டும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என யுவராஜ் சிங்கை 5வது வீரராக தேர்வு செய்தார்.

sehwag
sehwag

நம்பர் 4: விரேந்திர சேவாக்

அதேநேரத்தில் தன்னுடைய விருப்பமான வீரராக சேவாக்கை தேர்ந்தெடுத்த அவர், பந்துவீச்சாளர்களை சிதறடிப்பதில் வல்லவர் எனக்குறிப்பிட்டு 4வது இடத்தை வழங்கினார்.

sachin
sachin

நம்பர் 3: சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட்டில் ஒரு முழுமையான பேட்டிங்கை ஆடியவர் சச்சின் மட்டுமே, அவர் எப்போதும் ஒரு ஜாம்பவான் வீரர் எனக்குறிப்பிட்டு 3வது இடத்தை வழங்கினார்.

virat kohli
virat kohli

நம்பர் 2: விராட் கோலி

கிரிக்கெட்டின் குழந்தை என்று தான் கோலியை சொல்லவேண்டும், உலக கிரிக்கெட் ஜாம்பவான் வீரர்களில் ஒருவராக கோலி இருக்கிறார் என்று தெரிவித்து 2வது இடத்தை வழங்கினார்.

Dhoni
Dhoni

நம்பர் 1: மகேந்திர சிங் தோனி

என்னை பொறுத்தவரையில் எம்எஸ் தோனி நம்பர் 1 வீரர். அவர் ஒரு சிறந்த வீரர் என்பதை மட்டுமல்லாமல், இந்தியாவிற்காக எல்லாவிதமான கோப்பையையும் வென்று கொடுத்துள்ளார் என்று கூறி தோனியை நம்பர் 1 வீரராக தேர்ந்தெடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com