shane warne
shane warnept

’நூற்றாண்டின் சிறந்த பந்து’ to ’கிரிக்கெட்டில் 2935 விக்கெட்டுகள்’! ஷேன் வார்னே எனும் ஸ்பின் மன்னன்!

வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான மண்ணில் பிறந்து சுழற்பந்துவீச்சில் உலக கிரிக்கெட்டையே ஆட்டிப்படைத்த ஷேன் வார்னேவின் பிறந்தநாள் இன்று. பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த அவரின் சாதனைகள் சிலவற்றை இத்தொகுப்பில் பார்க்கலாம்..

1. 1001 சர்வதேச விக்கெட்டுகள்.. மொத்தமாய் 2935 விக்கெட்டுகள்!

சுழற்பந்துவீச்சு என்றதும் எல்லோருக்கும் ஆசிய கண்டத்தை சேர்ந்த டாப் கிளாஸ் ஸ்பின்னர்களின் பெயர்கள் மனக்கண்ணில் வந்து செல்லலாம். ஆனால் வேகப்பந்துவீச்சுக்கு பெயர்போன ஒருநாட்டிலிருந்து வந்து உலகக்கிரிக்கெட்டையே ஸ்பின் பவுலிங்கால் கட்டிப்போட்டவர் என்றால் அது ஆஸ்திரேலியாவின் ஷேர்ன் வார்னே மட்டும்தான்.

ஷேன் வார்னே
ஷேன் வார்னே

ஏன் ஷேன் வார்னே மற்ற ஸ்பின்னர்களை விடவும் சிறப்பானவர் என்றால், அவர் வீழ்த்திய 708 டெஸ்ட் விக்கெட்டுகளில் கிட்டத்தட்ட 63.3 சதவிகித விக்கெட்டுகளை அவர் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மண்ணில்தான் வீழ்த்தியுள்ளார். இந்த இரு நாடுகளிலும் அவர் கைப்பற்றியுள்ள விக்கெட்டுகளின் மொத்த எண்ணிக்கை 448. அதில் ஆஸ்திரேலியாவில் மட்டும் 319 விக்கெட்டுகள் மற்றும் இங்கிலாந்தில் மொத்தம் 129 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அந்த 129-இல் அவர் கைப்பற்றிய முதல் விக்கெட் தான் ‘Ball of The Century’ என வர்ணிக்கப்படுகிறது. ஆசியாவில் மொத்தம் 127 விக்கெட்டுகளை வார்னே கைப்பற்றியுள்ளார்.

ஷேன் வார்னே
ஷேன் வார்னே

மொத்தமாய் 339 சர்வதேச போட்டிகளில் விளையாடியிருக்கும் ஷேன் வார்னே டெஸ்ட்டில் 708 விக்கெட்டுகள் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 293 விக்கெட்டுகள் என 1001 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அத்துடன் முதல்தர கிரிக்கெட்டில் 1391 விக்கெட்டுகள், லிஸ்ட் ஏ போட்டிகளில் 473 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் வார்னே டி20 போட்டிகளில் வீழ்த்திய 70 விக்கெட்டுகளுடன் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மொத்தமாய் 2935 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

shane warne
147 ஆண்டில் முதல்வீரர்.. 58 ரன்களே மீதம்.. சச்சினின் ஆல்டைம் ரெக்கார்டை உடைக்கவிருக்கும் கோலி!

2. நூற்றாண்டின் சிறந்த பந்து (Ball of The Century)

“நூற்றாண்டின் சிறந்த பந்து” என போற்றப்படும் Ball of The Century என்ற அந்த பந்தை வீசியது ஒரு வேகப்பந்து வீச்சாளர் அல்ல. அதை வீசியது ஸ்பின் பந்துவீச்சுக்கு பரிச்சயமே இல்லாத ஒரு நாட்டிலிருந்து வந்தவர் என்றால் நம்பமுடிகிறதா. அதுவும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் என்ற புகழ்பெற்ற ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் வீசிய முதல் பந்தையே நூற்றாண்டின் சிறந்த பந்தாக வீசினார் ஆஸ்திரேலியாவின் ஸ்பின் ஜாம்பவான் ஷேன் வார்னே.

shane warne
shane warne

Ball of The Century’-யை வீசுவதற்கு முன்பு அவர் விளையாடியது வெறும் 11 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள்தான். அதில் அவர் வீழத்தியிருந்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை 31-ஆக மட்டுமே இருந்தது. இளம் வீரரான வார்னே, இங்கிலாந்து மண்ணில் 1993-இல் நடைபெற்ற ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்தார்.

shane warne
shane warne

அதுவும் அந்த தொடரின் முதல் போட்டியிலேயே விளையாடும் வாய்ப்பு வார்னேவுக்கு கிட்டியது. இங்கிலாந்து மண்ணில் முதல் டெஸ்ட் போட்டி. அதுவும் ஆஷஸ் தொடரில் என்பது ரொம்பவே ஸ்பெஷலான தருணம். ஆறு போட்டிகள் கொண்ட அந்த தொடரின் அனைத்து போட்டியிலும் வார்னே விளையாடினார். 

இங்கிலாந்து மண்ணில் அவர் வீசிய முதல் பந்தில் விக்கெட் வீழத்தியிருந்தார். கிரிக்கெட் உலகை வேகப்பந்து வீச்சாளர்கள் டாமினேட் செய்து கொண்டிருந்த அந்த காலத்தில் அந்தவொரு விக்கெட் மூலம் ஒரு சுழற்பந்து வீச்சாளரால் என்ன அப்செட் கொடுக்க முடியும் என்பதை உலக கிரிக்கெட்டுக்கு எடுத்துக்காட்டினார் வார்னே.

இங்கிலாந்து வீரர் மைக் கேட்டிங் தான் வார்னே இங்கிலாந்தில் கைபற்றிய முதல் விக்கெட். அவரை க்ளீன் போல்ட் செய்திருந்தார். கேட்டிங் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக தரமாக விளையாடக்கூடியவர் கேட்டிங் என்பதால் இளம் வீரர் வார்னேவின் பந்துவீச்சை அவர் வெளுத்து வாங்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கருதப்பட்டது. ஆனால் நடந்ததோ வேறு. 

வலது கை பேட்ஸ்மேனான கேட்டிங்கிற்கு லெக்-பிரேக் டெலிவரியாக வீசிய வார்னே, என்ன நடந்தது என பேட்ஸ்மேன் யூகிப்பதற்குள் ஆஃப் ஸ்டம்பை தகர்த்திருந்தார். வார்னே வீசிய அந்த பந்தானது லெக் ஸ்டம்பிற்கு ஏழு இன்ச் வெளியே பிட்ச்சானது என்றால் நம்பமுடிகிறதா. லெக் ஸ்டெம்புக்கு வெளியே பிட்ச்சாகி ஆஃப் ஸ்டம்பை தகர்த்த அந்த பந்துதான் நூற்றாண்டின் சிறந்த பந்தாக வர்ணிக்கப்படுகிறது. 6 போட்டிகள் கொண்ட அந்த தொடரில் 34 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் ஷேன் வார்னே.

shane warne
குறைந்த விலையில் இப்படியொரு ஆஃபரா? Jio அறிமுகப்படுத்தும் 2 புதிய பட்ஜேட் ரீசார்ஜ் திட்டங்கள்!

3. ஒரு காலண்டர் ஆண்டில் அதிக விக்கெட்டுகள்..

எவ்வளவு மனதிடத்துடன் ஒரு வீரர் களத்திற்கு பேட்டிங் செய்யவந்தாலும், அவர்களின் மனதிடத்தை சோதித்து பார்ப்பவர் தான் ஷேன் வார்னே. அவருடைய ஷார்ப்பான டர்ன் டெலிவரி மற்றும் லெக் பிரேக் டெலிவரிகள் எவ்வளவு திறமையான பேட்ஸ்மேனையும் திணறடிக்க கூடியவை.

அப்படிப்பட்ட ஒரு பந்துவீச்சாளராக வலம்வந்த ஷேன் வார்னே, ஒரு காலண்டர் ஆண்டில் அதிகவ் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்துள்ளார். 2005ம் ஆண்டு 15 போட்டிகளில் விளையாடி 96 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் ஷேன் வார்னே, ஒரு காலண்டர் ஆண்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளராக இன்றுவரை நீடித்துவருகிறார்.

shane warne
ராயன் வெற்றி.. NEEK-க்கு பிறகு 4வது படத்தை இயக்கும் தனுஷ்.. ஹீரோ இவரா? காத்திருக்கும் சர்ப்ரைஸ்

4. சதமடிக்காமல் அதிக ரன்கள் அடித்தவர்..

பந்துவீச்சில் தனது அணிக்காக தலைசிறந்த வீரராக செயல்பட்ட ஷேன் வார்னே, ஒரு பேட்ஸ்மேனாகவும் தனது அணிக்கு ஆதரவு தேவைப்படும்போது மட்டையால் திறம்பட செயல்பட்டுள்ளார். ஷேன் வார்னே சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 3154 டெஸ்ட் ரன்கள் மற்றும் 1018 ஒருநாள் ரன்கள் என மொத்தம் 4172 சர்வதேச ரன்களை அடித்துள்ளார்.

shane warne
shane warne

இதன்மூலம் கிரிக்கெட்டில் ஒரு சதம் கூட இல்லாமல் (4172) அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை வார்னே படைத்துள்ளார்.

shane warne
வாவ்வ்..! ஒரே இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள்..சுழற்பந்துவீச்சில் மிரட்டிய மைக்கேல் வாகனின் 18வயது மகன்!

5. ஷேன் வார்னே - முரளிதரன் டிராபி..

ஸ்பின் ஜாம்பவான்களாக வலம்வந்த ஷேன் வார்னே மற்றும் முத்தையா முரளிதரன் இருவரையும் போற்றும் வகையில், 2007-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியங்கள், ஆஸ்திரேலியா-இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு வார்ன்-முரளிதரன் டிராபி என்று பெயரிட முடிவு செய்தன.

வார்னே சில குறித்த சுவாரசியங்கள்:

* வார்னே தனது முதல் டெஸ்டில் இந்தியாவுக்கு எதிராக விளையாடியபோது 97 கிலோ எடையுடன் இருந்தார்.

* முதல் டெஸ்ட் போட்டியில் சச்சின் மற்றும் ரவி சாஸ்திரியின் அபாரமான பேட்டிங்கின் தாக்கத்தால் 200 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை மட்டுமே ஷேன் வார்னே வீழ்த்தினார்.

*2011 உலகக் கோப்பையில் இங்கிலாந்து-இந்தியா மோதிய போட்டிக்கு முன், இந்த போட்டி சமனில் முடிவடையும் என்று வார்னே கணித்தார். அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அவர் சொன்னதை போன்றே போட்டி சமனில் முடிந்தது.

*ஆஷஸ் டெஸ்ட் தொடரில் வார்னே வீசிய முதல் பந்தே நூற்றாண்டின் பந்து என்று அழைக்கப்பட்டது. 1993-ல் மைக் கேட்டிங்கை ஒரு லெக் பிரேக் டெலிவரி மூலம் டிஸ்மிஸ் செய்தார்.

*ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை முதல் ஐபிஎல் கோப்பைக்கு அழைத்துச்சென்றார்.

*எந்த மண்ணில் (இந்தியா) தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தை தொடங்கினாரோ, அதே மண்ணில் 15 ஆண்டுகள் கழித்து தனது டெஸ்ட் கிரிக்கெட்டின் கடைசி போட்டியையும் விளையாடினார். 

shane warne
'தோனியைவிட சிறந்தவர் ரிஷப் பண்ட்; விளையாட்டுத்தனமாக எண்ணிவிடவேண்டாம்'- எச்சரிக்கும் ரிக்கி பாண்டிங்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com