Jio
Jiopt desk

குறைந்த விலையில் இப்படியொரு ஆஃபரா? Jio அறிமுகப்படுத்தும் 2 புதிய பட்ஜேட் ரீசார்ஜ் திட்டங்கள்!

ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களை எளிதில் கவரும் வகையில் ரூ.189 மற்றும் ரூ.479 விலைப்பட்டியலில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது.
Published on

எல்லாம் டிஜிட்டல் மயமாகிவிட்ட காலசூழலில் மாதாந்திரம் கால் மற்றும் நெட்வொர்க் ரீசார்ஜ் செய்யவேண்டுமென்பது மிடில்கிளாஸ் வாடிக்கையாளர்கள் உட்பட அனைவருக்கும் அத்தியாவசியமாகி விட்டது. இத்தகைய சூழலில் ஜியோ, ஏர்டெல், விஐ முதலிய மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களின் விலையேற்றம் என்பது அனைத்துவிதமான மக்களையும் பாதித்துள்ளது.

jio
jio

இந்நிலையில்தான், வாடிக்கையாளர்களை கவரும் வகையில், இரண்டு புதிய பட்ஜெட் ரீசார்ஜ் திட்டங்களை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. நீங்கள் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். ஜியோ சமீபத்தில் தனது ரீசார்ஜ் திட்டத்தில் இரண்டு புதிய ரீசார்ஜ் திட்டங்களைச் சேர்த்துள்ளது, அவை மிகவும் சிக்கனமான ரீசார்ஜ் திட்டங்களாக கருதப்படுகிறது.

ரூ.189 மற்றும் ரூ.479 ஆகிய புதிய ரீசார்ஜ் திட்டங்களில் நீங்கள் பல நன்மைகளைப் பெறுவீர்கள்.

Jio
’அட்டகாசமான அம்சம்’- இனி பணம் அனுப்ப டெபிட் கார்டு தேவையில்லை.. UPI மூலம் ATM-ல் டெபாசிட் செய்யலாம்!

ஜியோ ரூ.189 ரீசார்ஜ் திட்டம்..

ஜியோவின் ரூ.189 திட்டம் மலிவு விலையில் அதிகபடியான சேவைகளை அனுபவிக்க விரும்புவோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது, இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் செய்து மகிழலாம். அதிக அழைப்பு செய்பவர்களுக்கு இந்த திட்டம் மிகவும் சிறந்ததாக பார்க்கப்படுகிறது.

இதனுடன், 300 எஸ்எம்எஸ் நன்மையையும் பெறுவீர்கள். குறைந்த விலையில் நல்ல சேவைகளை அனுபவிக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும்.

Jio
’இனி வீடியோ காலில் இத்தனை அம்சங்கள் இடம்பெறும்’- WhatsApp அறிமுகப்படுத்தும் AR ஃபில்டர்ஸ் அப்டேட்!

ஜியோவின் புதிய ரூ.479 திட்டம்..

ரிலையன்ஸ் ஜியோ ரூ.479 என்ற புதிய திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது, இது 84 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டம் குறிப்பாக நீண்ட கால வேலிடிட்டியுடன் அதிக நன்மைகளை விரும்புபவர்களுக்கானதாக பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்தில், 84 நாட்களுக்கு மொத்தம் 6 ஜிபி டேட்டாவைப் பெறுவீர்கள். இது தவிர, வரம்பற்ற வாய்ஸ்கால் அழைப்பையும் நீங்கள் பெறலாம். உடன் பொழுதுபோக்கு மற்றும் கிளவுட் சேமிப்பகத்தை அனுபவிக்க முடியும். அதுமட்டுமில்லாமல் இந்த திட்டத்தில், நீங்கள் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றின் சந்தாவை முற்றிலும் இலவசமாகப் பெறுவீர்கள்.

Jio
நீங்கள் இல்லாமலேயே உங்கள் யுபிஐ பயன்படுத்தி பணம் செலுத்தலாம்..! அறிமுகமாகும் UPI Circle அம்சம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com