சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்web

”நாட்டுக்காக இடது கை ஸ்பின்னராக சொன்னாலும் செய்வேன்..” - சஞ்சு சாம்சன் ஓபன் டாக்

பேட்டிங் ஆர்டர் மாற்றி விளையாடப்படுவது குறித்து பேசியிருக்கும் சஞ்சு சாம்சன், நாட்டிற்காக 9வது இடத்திலும் பேட்டிங் செய்வேன், பந்துவீச சொன்னாலும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
Published on
Summary

பேட்டிங் ஆர்டர் மாற்றி விளையாடப்படுவது குறித்து பேசியிருக்கும் சஞ்சு சாம்சன், நாட்டிற்காக 9வது இடத்திலும் பேட்டிங் செய்வேன், பந்துவீச சொன்னாலும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்துக்கான இந்திய ஒருநாள் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக கேஎல் ராகுல் மற்றும் துருவ் ஜூரெல் இருவரும் இடம்பெற்றுள்ளனர். துருவ் ஜூரெலின் சமீபத்திய ஃபார்மை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டிருந்தாலும், தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டுவரும் சஞ்சு சாம்சன் இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முதலில் சஞ்சு சாம்சனுக்கு டி20யில் வாய்ப்பு மறுக்கப்பட்டு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது டி20 போட்டியில் வாய்ப்பு கிடைத்தாலும் ஆசியக்கோப்பை தொடரில் அவர் நம்பர் 5 வீரராக களமிறக்கப்பட்டு விளையாடினார். அதிலும் ஒரு போட்டியில் நம்பர் 8 வரை பேட்டிங்கே வரவில்லை. சுப்மன் கில் அணியில் இருப்பதால், சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் விளையாடுவதுதான் சரி என அஜித் அகர்கர் தரப்பில் சொல்லப்பட்டது.

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்

இந்தசூழலில் கடைசி ஒருநாள் போட்டியில் சதமடித்த சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு மிடில் ஆர்டரில் விளையாடக்கூடிய விக்கெட் கீப்பர் வேண்டுமென்பதால் தான் சஞ்சு சாம்சன் எடுக்கப்படவில்லை என்று அகர்கர் கூறியுள்ளார்.

அகர்கரின் இந்த ஸ்டேட்மெண்ட் சஞ்சு சாம்சனை வேண்டுமென்றே புறக்கணிப்பதாக உள்ளது என பல்வேறு முன்னாள் வீரர்கள் விமர்சித்துவரும் நிலையில், பேட்டிங் ஆர்டர் மாறி களமிறக்கப்படுவது குறித்து சஞ்சு சாம்சன் பேசியுள்ளார்.

சஞ்சு சாம்சன்
’16 ஆண்டுகளாக இந்திய அணிக்கு தெரியவில்லை..’ - ரோகித்தை புகழ்ந்த சாம்சன்!

நாட்டுக்காக எதையும் செய்வேன்..

2025 CEAT கிரிக்கெட் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த டி20 பேட்டருக்கான விருதை வென்ற சஞ்சு சாம்சன், பேட்டிங் ஆர்டர் மாற்றி விளையாடுவது குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது பேசிய அவர், “இந்திய ஜெர்சியை அணியும்போது, ​​எந்த வேலை உங்களுக்கு வழங்கப்பட்டாலும் மறுக்க முடியாது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் இந்தியாவின் ஜெர்சியை அணிந்து கிரிக்கெட் விளையாடவே நான் இதுவரை கடினமாக உழைத்திருக்கிறேன். என் நாட்டிற்காக விளையாடுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

நீங்கள் என்னை 9வது இடத்தில் பேட்டிங் செய்ய சொன்னாலும் சரி, இடது கை சுழற்பந்து வீச்சாளராக மாறி பந்துவீச சொன்னாலும் சரி, என் நாட்டுக்காக எந்த வேலையாக இருந்தாலும் அதில் எனக்கு கவலையில்லை. நான் அதை நிச்சயம் செய்வேன்” என்று பேசியுள்ளார்.

சஞ்சு சாம்சன்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரணம்.. சஞ்சு சாம்சனை வஞ்சிக்கும் அஜித் அகர்கர்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com